வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள் மற்றும் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக, நீலகிரியில் கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ம் ஆண்டில் கொலை,கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மனோஜ் , சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
கோடநாடு, கொலை, கொள்ளை, ஜெயலலிதா, பங்களா, சென்னை உயர்நீதிமன்றம், மனோஜ்,
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, '' வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. மேல் விசாரணை நடத்தப்பட்டதில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள் மற்றும் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது என்றார்.

தொடர்ந்து வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்,16க்கு ஒத்திவைத்தார்.