மாணவியருக்கு பாலியல் தொல்லை அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் கைது| Dinamalar

மாணவியருக்கு பாலியல் தொல்லை அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் கைது

Added : செப் 02, 2022 | |
குளித்தலை:அரசு பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, தோகைமலை யூனியன் கூடலுார் பஞ்., பொம்ம நாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக மருதை, 59, பணியாற்றி வருகிறார். இவர் திருமணமாகாதவர். இப்பள்ளியில், 6, 7, 8ம் வகுப்பு பாடம் எடுத்து வந்துள்ளார். சில நாட்களாக இவர், பள்ளி

குளித்தலை:அரசு பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, தோகைமலை யூனியன் கூடலுார் பஞ்., பொம்ம நாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக மருதை, 59, பணியாற்றி வருகிறார். இவர் திருமணமாகாதவர். இப்பள்ளியில், 6, 7, 8ம் வகுப்பு பாடம் எடுத்து வந்துள்ளார். சில நாட்களாக இவர், பள்ளி மாணவ - மாணவியரை அடித்தும், கொச்சை வார்த்தைகளால் திட்டியும், பாலியல் தொந்தரவும் செய்ததாக புகார் எழுந்தது.

பாதிக்கப்பட்ட மாணவியர் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரிடம் மாணவியரின் நிலையை எடுத்துக் கூறி புகார் தெரிவித்துள்ளனர்.பள்ளி தலைமை ஆசிரியர் மேரி லாரா சேசுராஜ் விசாரணை நடத்தியதில், புகார் உறுதியானது. அவர் குளித்தலை போலீசில் புகார் செய்தார். குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்கு பதிவு செய்து, மருதையை கைது செய்து, சிறையில் அடைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X