பாம்பாறு அணை மதகு ரோப் 'கட்'நீர் வீணாவதால் விவசாயிகள் வேதனை

Added : செப் 02, 2022 | |
Advertisement
ஊத்தங்கரை:ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணையின், நான்காவது மதகின் 'ரோப்' அறுந்ததால், அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, 1983ல் கட்டப்பட்ட பாம்பாறு அணை, 19.60 அடி உயரம் கொண்டது. அணை மூலம், 4,000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.கடந்த மூன்று நாட்களாக, திருப்பத்துார் மாவட்டம் ஜவ்வாது மலையில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து

ஊத்தங்கரை:ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணையின், நான்காவது மதகின் 'ரோப்' அறுந்ததால், அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, 1983ல் கட்டப்பட்ட பாம்பாறு அணை, 19.60 அடி உயரம் கொண்டது. அணை மூலம், 4,000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.கடந்த மூன்று நாட்களாக, திருப்பத்துார் மாவட்டம் ஜவ்வாது மலையில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு, 4,000 - 5,000 கன அடி நீர், கடந்த மூன்று நாட்களாக அணையின் ஐந்து மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு அணையின் நான்காவது மதகை இயக்கும் இயந்திரத்தின் 'பேரிங்' சேதமானதால், மதகின் கயிறு அறுந்து, மதகின் கதவு முழுவதும் மேல் நோக்கி சென்று விட்டது.இதனால், அணையில் அதிகளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த நீர், 6 கி.மீ., ஓடி, பாவக்கல் தென்பெண்ணையாற்றில் கலக்கிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, பாம்பாறு அணைக்கு சென்று ஆய்வு செய்தார். 'ஆறு நாட்களில் மதகு சரிசெய்யப்படும்' என தெரிவித்தார்.அணையில் நீர் வடிந்து, நீர்மட்டம், 6.5 அடியான பிறகு தான், மதகின் கதவை சரிபார்க்க முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாம்பாறு அணையிலிருந்து வெளியேறும் நீர், சாத்தனுார் அணை சென்றடைந்து, வீணாக கடலில் கலக்கிறது. இதனால் ஊத்தங்கரை சுற்று வட்டார விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X