வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டேராடூன்: நடு ரோட்டில் மது அருந்தியது, விமானத்தில் சிக்கெரட் பிடித்ததாக தொடரப்பட்ட வழக்கில் யூடியுப்பர் பாபி கட்டாரியாவுக்கு எதிராக உத்தர்கண்ட் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமான பாபி கட்டாரியாவை, 6.30 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் டேராடூன்- - முசூரி சாலையின் நடுவில், கட்டாரியா நாற்காலியில் அமர்ந்து மது அருந்திய வீடியோ வெளியானது.
விமானத்தில் சிக்கெரட் பற்ற வைப்பது போன்ற வீடிேயோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாயின.
![]()
|
இதையடுத்து ''கட்டாரியா மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த உத்தர்கண்ட் போலீசார் அவரை தேடி வந்தனர். , பாபி கட்டாரியாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிரவாண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் இருக்குமிடம் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று உத்தர்கண்ட் போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில், பாபி கட்டாரியாவுக்கு எதிராக லுக் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.