விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட காந்தி சிலை:அதே இடத்தில் அமைக்க முடிவு

Added : செப் 02, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ரோடு விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட காந்தி சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவ பூமி பூஜை நடந்தது.பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில், கடந்த, 1985ம் ஆண்டு ஜன., 30ம் தேதி மகாத்மா காந்தி சிலை, நியூஸ்கீம் ரோட்டில் அமைக்கப்பட்டு, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில், மரியாதை செலுத்தப்பட்டது.ரோடு விரிவாக்கத்துக்காக காந்தி சிலை அகற்றப்பட்டு, தாலுகா அலுவலக
விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட காந்தி சிலை:அதே இடத்தில் அமைக்க முடிவு

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ரோடு விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட காந்தி சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவ பூமி பூஜை நடந்தது.பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில், கடந்த, 1985ம் ஆண்டு ஜன., 30ம் தேதி மகாத்மா காந்தி சிலை, நியூஸ்கீம் ரோட்டில் அமைக்கப்பட்டு, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில், மரியாதை செலுத்தப்பட்டது.ரோடு விரிவாக்கத்துக்காக காந்தி சிலை அகற்றப்பட்டு, தாலுகா அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டது.ரோடு விரிவாக்கத்துக்காக எடுக்கப்பட்ட காந்தி சிலை, மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, நகராட்சிக்கு சொந்தமான நியூஸ்கீம் ரோட்டில் முறையான அனுமதி பெற்று மீண்டும் சிலை அமைக்க, நேற்று பூமி பூஜை நடந்தது.நகராட்சித்தலைவர் சியாமளா தலைமை வகித்தார். கமிஷனர் தாணுமூர்த்தி, டி.எஸ்.பி., தீபசுஜிதா, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன், ஏ.சி.இ., சிவில் இன்ஜினியர்ஸ் பொள்ளாச்சி சங்க நிர்வாகிகள், தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் பங்கேற்றனர்.பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில், அசோசியேஷன் ஆப் ஏ.சி.இ., சிவில் இன்ஜினியர்ஸ் பொள்ளாச்சி சங்கம் சார்பில், காந்தி சிலை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.தொழில்வர்த்தக சபை தலைவர் கூறுகையில், ''பொள்ளாச்சியில் ரோடு விரிவாக்கத்துக்காக எடுக்கப்பட்ட காந்தி சிலை, மீண்டும் அதே பகுதியில் அமைக்கப்படுகிறது. பொள்ளாச்சி தமிழிசை சங்கம், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையுடன் இணைந்து அசோசியேஷன் ஆப் ஏ.சி.இ., சிவில் இன்ஜினியர்ஸ் பொள்ளாச்சி அமைப்பு இப்பணிகளை மேற்கொள்கிறது. அக்., 2ம் தேதி காந்தி ஜெயந்திக்குள் பணிகளை முடித்து, திறக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.அசோசியேஷன் ஆப் ஏ.சி.இ., சிவில் இன்ஜினியர்ஸ் பொள்ளாச்சி அமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ''சிலை அமைப்பதற்கான பணிகள் முழுவதும் சங்கம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது சிலை அமைக்க, மாதிரி படம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், கருத்துகள் கேட்டறிந்த பின், சிறு மாறுதல்கள் செய்து முடிவு செய்து அமைக்கப்படும்,'' என்றார்.


மகிழ்ச்சியான அறிவிப்பு


பொள்ளாச்சியில் காந்தி சிலை நிறுவ நடவடிக்கை எடுத்ததற்கு காந்தி ஆசிரமம், சேவாலயம் உள்ளிட்ட நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.மகாத்மா காந்தி ஆசிரமம் நிர்வாக அறங்காவலர் ரங்கநாதன் கூறுகையில், ''தமிழிசை சங்கம் சார்பில் நிறுவப்பட்ட காந்தி சிலை கம்பீரமாக காட்சியளித்தது. ரோடு விரிவாக்கத்துக்காக எடுக்கப்பட்ட சிலை மீண்டும் அமைக்க, பல்வேறு அமைப்புகள் வாயிலாக வலியுறுத்தப்பட்டடன. தற்போது, அதற்கான பூமி பூஜை நடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X