'நீட்' தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு:மாணவர்கள் மதிப்பாய்வு செய்யலாம்

Added : செப் 02, 2022 | |
Advertisement
உடுமலை:'நீட்' தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான விடைக்குறிப்புகள் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) இணையதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இயற்கை மருத்துவப்படிப்புகள் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு கடந்த ஜூலை 17ல் நடந்தது. இதற்கான முடிவுகள் வரும் 7ம் தேதி வெளியாக உள்ளது.வழக்கமாக தேர்வு முடிவின், 10 நாட்களுக்கு முன், விடைக்குறிப்பு (ஆன்சர்

உடுமலை:'நீட்' தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான விடைக்குறிப்புகள் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) இணையதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இயற்கை மருத்துவப்படிப்புகள் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு கடந்த ஜூலை 17ல் நடந்தது. இதற்கான முடிவுகள் வரும் 7ம் தேதி வெளியாக உள்ளது.வழக்கமாக தேர்வு முடிவின், 10 நாட்களுக்கு முன், விடைக்குறிப்பு (ஆன்சர் கீ) வெளியிடப்படும். அதன் வாயிலாக மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை மதிப்பாய்வு செய்து கொள்ளலாம்.
விடைக்குறிப்புகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால், 200 பதிவுக்கட்டணம் செலுத்தி அதுகுறித்து புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது: இதற்கு www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் விடைக்குறிப்புடன் ஓ.எம்.ஆர்., சீட் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
விடைக்குறிப்பு வாயிலாக மதிப்பெண்ணை கணக்கிட முடியும்.தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக சந்தேகம் இருந்தால் அல்லது விடைக் குறிப்பில் குழப்பம் இருந்தாலோ, தேர்வு எழுதியவர்கள் என்.டி.ஏ., இணையதளம் வாயிலாக தேர்வாணையத்தை அணுகலாம்.பதில் சரியாக இருக்கும் பட்சத்தில், அந்த விடை விடைக்குறிப்பில் திருத்தப்பட்டு 'பைனல் கீ' என்.டி.ஏ., தளத்தில் வெளியிடப்படும். ஏனென்றால், இறுதி விடைக்குறிப்பு வெளியான பின், தேர்வு முடிவுகளை மாற்ற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X