பஸ்களில் மாணவர்கள் தொங்கல் பயணத்தை...அனுமதிக்காதீங்க! நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

Added : செப் 02, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:''படிக்கட்டுகளில் தொங்கல் பயணம் அனுமதிக்கக்கூடாது; ஆய்வின் போது கண்டறியப்பட்டால், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பொள்ளாச்சி, உடுமலை நகரம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக, அரசு மற்றும் தனியார் பஸ்கள்
   பஸ்களில் மாணவர்கள் தொங்கல் பயணத்தை...அனுமதிக்காதீங்க! நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

பொள்ளாச்சி:''படிக்கட்டுகளில் தொங்கல் பயணம் அனுமதிக்கக்கூடாது; ஆய்வின் போது கண்டறியப்பட்டால், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பொள்ளாச்சி, உடுமலை நகரம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக, அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.கிராமப்புறங்களில் வசிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், பஸ்களை நம்பியே உள்ளனர்.
இந்நிலையில், 'பீக் அவர்ஸ்' எனப்படும், காலை மற்றும் மாலை நேரங்களில், பஸ்களில் கூட்ட நெரிசலால் மாணவர்கள், படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.பஸ் நிற்கும் போது ஏறாமல், பஸ் கிளம்பிய பின்னர் ஓடிச்சென்று ஏறுவது என, விதிமுறை மீறல்களில் சிலர் ஈடுபடுவதை காண முடிகிறது.இதனால் ஏற்படும் விபத்துகள், ஒரு குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தும் என்பதை இளைஞர்கள் உணர மறுக்கின்றனர்.கூடுதல் பஸ் இயக்கணும்சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகங்கள் பஸ்களில் எழுதப்பட்டுள்ளன; ஆனால் அவை யாரும் பின்பற்றுகின்றனரா என்பதுதான் கேள்வியாக உள்ளது. மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிச்செல்லும் போது, பஸ் ஒரு புறம் சாய்ந்தபடி செல்வதை கண்டால் நெஞ்சம் பதறுகிறது.பஸ் பிரேக் பிடிக்கும் போது, தொங்கிச்செல்பவர்களில் ஒரு சிலர் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படும்; பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் ஊனமாகிவிடும் என்பதை உணர மறுக்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், படிக்கட்டுகளில் தொங்கிச்சென்றால் அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.தற்போது, அவை கிடப்பில் போடப்பட்டதால் ஆபத்தான பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் பஸ்சில் பயணிகளை ஏற்றக்கூடாது என விதிமுறை கட்டாயப்படுத்த வேண்டும்.ஒரே பஸ் செல்லும் கிராமங்களுக்கு, கூடுதல் பஸ் அதாவது காலை மற்றும் மாலை நேரங்களிலாவது இயக்க வேண்டும். படிக்கட்டுகளில் விதிமுறைகளை மீறி பயணிப்பவர்கள், பயணம் செய்ய அனுமதிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


ஒத்துழைப்பு அவசியம்


வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது:கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.'பீக் அவர்ஸ்' எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரிகள் விடும் நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்; இந்த நேரத்தில் அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களில் கூட்டத்தை தவிர்க்க கல்லுாரிகள், பள்ளிகள் முன் நிறுத்தி மாணவர்களை அழைத்துச்செல்ல அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரி நிர்வாகங்கள், படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பினை கருதி, மாலை நேரங்களில் பொறுப்பாளர்களை நியமித்து, மாணவர்களை ஒழுங்குப்படுத்திச்செல்ல அறிவுறுத்த வேண்டும்.பஸ்களில் தொங்கிச்செல்ல அனுமதிக்கக்கூடாது. மேலும், பஸ் நடத்துனர்களும், மாணவர்களை தொங்கியபடி வர அனுமதிக்கக்கூடாது.தொங்கல் பயணத்தை அனுமதிக்கும் நடத்துனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வீண் அசம்பாவிதங்களை தவிர்க்க அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X