வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு:'நாட்டின் சட்ட திட்டங்களை, 'டுவிட்டர்' நிறுவனம் மதிப்பதில்லை. அவர்கள் வேண்டுமென்றே அதை மீறுகின்றனர்' என, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
'அரசியல் ரீதியிலான சில பதிவுகளை நீக்கக்கோரி, மத்திய அரசு எங்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. ஆனால் இது தொடர்பாக, பதிவு போட்டவருக்கு அரசு தரப்பில், நோட்டீஸ் அனுப்பப்படவில்லை.
![]()
|
இதுபோன்ற நடவடிக்கைகள் பேச்சு சுதந்திரத்தை பாதிக்கும்' என, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், 'டுவிட்டர்' சமூக வலைதள நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழிநுட்பத் துறை அமைச்சகம் சார்பில், 101 பக்க பதில் மனு ம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'நாட்டின் சட்ட திட்டங்களை டுவிட்டர் நிறுவனம் மதிப்பதில்லை. அதை வேண்டுமென்றே மீறுவதை தொடர்ந்து செய்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு கவலை இல்லை' என, பதில் அளித்தது.இந்த வழக்கு வரும் 8ல் விசாரணைக்கு வருகிறது.