'வளர்ச்சித் திட்டங்களை முடக்கிய தி.மு.க.,மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்'

Added : செப் 02, 2022 | |
Advertisement
கோவை:அரசியல் ஆதாயத்துக்காக, வளர்ச்சித்திட்டங்களை முடக்கிய தி.மு.க., மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என, கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2021ம் ஆண்டு தேர்தல் வரை, தமிழகமே போராட்டக்களமாக இருந்தது. இயற்கை எரிவாயு திட்டம், நியூட்ரினோ திட்டம், சென்னை - சேலம்

கோவை:அரசியல் ஆதாயத்துக்காக, வளர்ச்சித்திட்டங்களை முடக்கிய தி.மு.க., மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என, கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2021ம் ஆண்டு தேர்தல் வரை, தமிழகமே போராட்டக்களமாக இருந்தது. இயற்கை எரிவாயு திட்டம், நியூட்ரினோ திட்டம், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை, எரிவாயு குழாய் பதித்தல், மின் பாதை அமைத்தல் என மத்திய, மாநில அரசுகளின் எந்தவொரு வளர்ச்சித்திட்டத்தையும் எதிர்த்து, திடீர் போராளிகள் போராட்டம் நடத்தினர். இதில், தி.மு.க., அரசியல் ஆதாயம் அடைந்தது.முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தபோது, அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. தி.மு.க., உயர் நீதிமன்றம் சென்றது. இடையூறாக இருந்த ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான 15க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகள், ஒரே நாளில் திரும்பப்பெறப்பட்டன. இதனால், வழக்கு தொடர்ந்தவர்கள் அனைவரும் தி.மு.க.,வால் இயக்கப்பட்டவர்கள் என்பது அம்பலமானது.அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு எதிராக போராடியவர்களை, தி.மு.க., ஆட்சியில் காண முடியவில்லை. சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை, எதிர்க்கட்சியாக இருந்து எதிர்த்த தி.மு.க., பல்வேறு தரப்பினரையும் துாண்டிவிட்டு, அத்திட்டத்தையே முடக்கியது. இப்போது தி.மு.க., ஆட்சியில், அதே எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற முனைகின்றனர்.நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, “சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை தி.மு.க., எதிர்க்கவில்லை. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றுதான் சொன்னோம்" என, ஒரு காய்கறி மார்க்கெட்டையே, சோற்றில் மறைக்க முயற்சி செய்துள்ளார்.ஸ்டாலின் உள்ளிட்டோர், எட்டு வழிச்சாலைக்கு எதிராக பேசியதை, சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பொதுமக்கள், தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளனர்.அ.தி.மு.க., ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களை, அரசியல் ஆதாயத்துக்காக முடக்கிய தி.மு.க., மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X