கோவை கல்லூரியில் ஓணம் வந்தல்லோ!

Added : செப் 02, 2022 | |
Advertisement
கேரள மாநிலத்தின் பாரம்பரிய ஓணம் பண்டிகை, வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில், ஓணம் பண்டிகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கல்லுாரியின் மாணவர் மன்றம் மற்றும் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் நடந்த இவ்விழாவினை, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். இதில், மாணவ, மாணவிகள் மற்றும்
கோவை கல்லூரியில் ஓணம் வந்தல்லோ!

கேரள மாநிலத்தின் பாரம்பரிய ஓணம் பண்டிகை, வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில், ஓணம் பண்டிகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கல்லுாரியின் மாணவர் மன்றம் மற்றும் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் நடந்த இவ்விழாவினை, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். இதில், மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், கேரளாவின் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர்.தொடர்ந்து, மாணவிகள் கல்லுாரி வளாகத்தில் பிரமாண்ட பூக்கோலமிட்டு, திருவாதிரைக்களி குழு நடனமாடினர். பின்னர், செண்டை மேளம் முழங்க மாபலி மன்னர் வேடமணிந்தவர் அழைத்து வரப்பட்டார். இதையடுத்து, கயிறு இழுத்தல், கேரளாவின் பாரம்பரிய சுவைமிக்க பாயசம் தயாரித்தல் மற்றும் குழு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பின், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X