பல்லவர் கோவில் கட்டட கலைஇன்ஜி., மாணவர்களுக்கு விளக்கம்

Added : செப் 02, 2022 | |
Advertisement
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அரசு சிற்பக் கல்லுாரியில், பல்லவர் கோவில் கட்டடக்கலை குறித்து, பொறியியல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கூவத்துார் அடுத்த, சீக்கினாங்குப்பம், தனியார் பொருளாதார சிறப்பு மண்டலம், மார்க் சுவர்ணபூமி பகுதியில், 'மிடாஸ்' எனப்படும், மார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் அண்டு ஆர்க்கிடெக்சர் பள்ளி இயங்குகிறது.இங்கு பயிலும்,
பல்லவர் கோவில் கட்டட கலைஇன்ஜி., மாணவர்களுக்கு விளக்கம்

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அரசு சிற்பக் கல்லுாரியில், பல்லவர் கோவில் கட்டடக்கலை குறித்து, பொறியியல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கூவத்துார் அடுத்த, சீக்கினாங்குப்பம், தனியார் பொருளாதார சிறப்பு மண்டலம், மார்க் சுவர்ணபூமி பகுதியில், 'மிடாஸ்' எனப்படும், மார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் அண்டு ஆர்க்கிடெக்சர் பள்ளி இயங்குகிறது.இங்கு பயிலும், வடிவமைப்பு மற்றும் கட்டடவியல் மாணவர்கள், பல்லவர் கட்டடக்கலை நுட்பம் அறியவும், தற்போதைய கட்டடவியலில் அந்நுட்பம் குறித்த சாத்தியம் உள்ளிட்டவை அறியவும், மாமல்லபுரம், அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரியில், நேற்று முகாமிட்டனர். கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், பல்லவர் கட்டடக்கலை குறித்து விளக்கினார்.

கி.பி., 3ம் - 9ம் நுாற்றாண்டு வரை ஆண்ட பல்லவர், தொழில்நுட்பமோ, கருவிகளோ இன்றி கோவில்கள் அமைத்தது, காஞ்சிபுரத்தில், அவர்கள் கட்டிய கைலாசநாதர் கோவில் குறித்து எடுத்துரைத்தார்.தஞ்சாவூரில் சோழர் கட்டிய பிரகதீஸ்வரர் கோவிலும், கர்நாடக மாநில விருபாக்சா கோவிலும் உருவாக, பல்லவர் கட்டடக்கலை முன்மாதிரியாக அமைந்தது குறித்து விளக்கி கூறினார்.

மேலும், கோவில் அமைக்க இடம் தேர்வு செய்தது, அடித்தளம் முதல் கோவிலை எழுப்புவது வரையிலான நுட்பம், பல்லவர் கட்டடக்கலையின் தாக்கம், பிற பகுதிகளுக்கும் இக்கலை பரவியது உள்ளிட்டவை குறித்து, முதல்வர் விளக்கினார். மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X