ஒரே நாளில் 10,000 யூனிட் புக்கிங்: சொல்லி அடிச்ச ஓலா!

Updated : செப் 02, 2022 | Added : செப் 02, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரே நாளில் 10,000க்கும் அதிகமான யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. பெட்ரோல் விலையேற்றம், காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால், எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளநிலையில், ஓலா நிறுவனம் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. இதில் எஸ்1
DinamalarDotcom, Special, Automobiles, Bikes, OLA, OLA S1, OLA S1Pro,தினமலர்டாட்காம், ஸ்பெஷல், ஆட்டோமொபைல், பைக்குகள், ஓலா எஸ்1, ஓலா எஸ்1ப்ரோ, புக்கிங்,

ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரே நாளில் 10,000க்கும் அதிகமான யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.

பெட்ரோல் விலையேற்றம், காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால், எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளநிலையில், ஓலா நிறுவனம் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. இதில் எஸ்1 ப்ரோ அதிக ரேஞ்ச் மற்றும் டாப் ஸ்பீடு கொண்ட ப்ரீமியம் ஸ்கூட்டராகும்.



latest tamil news


தீப்பிடிப்பது, பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடிப்பது, பேட்டரி பிரச்னையால் புகை வருவது உள்ளிட்ட விமர்சனங்கள் எழுந்தாலும், தற்போது வரை அதன் விற்பனையில் எந்த குறையும் வரவில்லை. அதற்கு உதாரணமாக, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அப்டேட் செய்யப்பட்ட எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. ஒரே நாளில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் 10,000 எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. புக்கிங் செய்யப்பட்ட எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற செப்டம்பர் 7ம் தேதியில் இருந்து துவங்கப்படவுள்ளதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.



latest tamil news



இந்தியாவின் மிகவும் அட்வான்ஸான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்கும் ஓலா எஸ்1 -ஸ்கூட்டரில் 3kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது. இதன் மூலம் 141கிமீ ரேஞ்சை பெறலாம் என ARAI சான்றளித்துள்ளது. அதேசமயம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனமோ இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நார்மல் மோடில் 101கிமீ ரேஞ்சையும், ஈக்கோ மோடில் 128கிமீ ரேஞ்சையும், ஸ்போர்ட்ஸ் மோடில் 90கிமீ ரேஞ்சையும் பெறலாம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த எஸ்1 ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக 95கிமீ வேகத்தில் செல்லும்.



latest tamil news


இதில், முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இந்த ஸ்கூட்டர் மூவ் ஒஎஸ் (Move OS) மென்பொருள் மூலம் இயக்கப்படுகிறது. இதன் மூலமாக மியூசிக் ப்ளேபேக், நாவிகேஷன், ஓட்டுனருக்கு தேவையான உதவிகளை வழங்கும் செயலி மற்றும் ரிவர்ஸில் செல்வதற்கான மோட் என எக்கசக்க சிறப்பு வசதிகளை பெற்றுள்ளது.



latest tamil news


இந்த அப்டேட் செய்யப்பட்ட ஓலா எஸ்1 ஸ்கூட்டர் போர்செலயின் வொயிட், ஜெட் பிளாக், நியோ மிண்ட், கோரல் க்ளாம் மற்றும் லிக்யுடு சில்வர் என 6 வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும். இதன் விலை ரூ.99,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

Vena Suna - Coimbatore,இந்தியா
03-செப்-202200:08:57 IST Report Abuse
Vena Suna விலை அதிகம்.சின்ன வண்டி.முதுகு வலி வந்து விடும் உயரமான ஆட்களுக்கு.
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
02-செப்-202222:43:41 IST Report Abuse
Fastrack அமெரிக்காவில் நின்றுக்கொன்று பயணிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் Ola பிரபலம்
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
05-செப்-202201:30:38 IST Report Abuse
FastrackLime ஸ்கூட்டர் ,,...
Rate this:
Cancel
raja - Bangalore,இந்தியா
02-செப்-202222:07:24 IST Report Abuse
raja தெனமும் ஏகப்பட்ட பெட்ரோல் கார்கள் வித்துக்கிட்டே தான் இருக்கு. பேட்டரி வண்டியும் விக்க தான் செய்யுது. பேட்டரிய சார்ஜ் செய்ய எங்கிருந்து மின்சாரம் எடுக்கப்படுகிறது?, அதற்கு எந்த அளவிற்கு காற்று மாசு உண்டாகிறது? என்பதை அனைவரும் வசதியாக மறந்து விடுகின்றனர்.
Rate this:
03-செப்-202210:50:07 IST Report Abuse
ஆரூர் ரங்அவரவர் வீட்டிலே சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X