ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரே நாளில் 10,000க்கும் அதிகமான யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.
பெட்ரோல் விலையேற்றம், காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால், எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளநிலையில், ஓலா நிறுவனம் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. இதில் எஸ்1 ப்ரோ அதிக ரேஞ்ச் மற்றும் டாப் ஸ்பீடு கொண்ட ப்ரீமியம் ஸ்கூட்டராகும்.
![]()
|
தீப்பிடிப்பது, பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடிப்பது, பேட்டரி பிரச்னையால் புகை வருவது உள்ளிட்ட விமர்சனங்கள் எழுந்தாலும், தற்போது வரை அதன் விற்பனையில் எந்த குறையும் வரவில்லை. அதற்கு உதாரணமாக, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அப்டேட் செய்யப்பட்ட எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. ஒரே நாளில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் 10,000 எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. புக்கிங் செய்யப்பட்ட எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற செப்டம்பர் 7ம் தேதியில் இருந்து துவங்கப்படவுள்ளதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.
![]()
|
இந்தியாவின் மிகவும் அட்வான்ஸான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்கும் ஓலா எஸ்1 -ஸ்கூட்டரில் 3kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது. இதன் மூலம் 141கிமீ ரேஞ்சை பெறலாம் என ARAI சான்றளித்துள்ளது. அதேசமயம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனமோ இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நார்மல் மோடில் 101கிமீ ரேஞ்சையும், ஈக்கோ மோடில் 128கிமீ ரேஞ்சையும், ஸ்போர்ட்ஸ் மோடில் 90கிமீ ரேஞ்சையும் பெறலாம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த எஸ்1 ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக 95கிமீ வேகத்தில் செல்லும்.
![]()
|
இதில், முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இந்த ஸ்கூட்டர் மூவ் ஒஎஸ் (Move OS) மென்பொருள் மூலம் இயக்கப்படுகிறது. இதன் மூலமாக மியூசிக் ப்ளேபேக், நாவிகேஷன், ஓட்டுனருக்கு தேவையான உதவிகளை வழங்கும் செயலி மற்றும் ரிவர்ஸில் செல்வதற்கான மோட் என எக்கசக்க சிறப்பு வசதிகளை பெற்றுள்ளது.
![]()
|
இந்த அப்டேட் செய்யப்பட்ட ஓலா எஸ்1 ஸ்கூட்டர் போர்செலயின் வொயிட், ஜெட் பிளாக், நியோ மிண்ட், கோரல் க்ளாம் மற்றும் லிக்யுடு சில்வர் என 6 வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும். இதன் விலை ரூ.99,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.