வாலிபர் கொடூர கொலைஉடலை வாங்க மறுப்பு

Added : செப் 02, 2022 | |
Advertisement
ஊத்துக்கோட்டை:வாலிபரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்காமல் உடலை வாங்க முடியாது என அவரது உறவினர்கள் மறுத்தனர்.ஊத்துக்கோட்டை, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் ராபின், 26. நேற்று முன்தினம் இரவு இவர் நண்பரின் திருமணத்திற்கு சென்று பைக்கில் திரும்பும்போது, திருவள்ளூர் சாலையில், நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் அவரை

ஊத்துக்கோட்டை:வாலிபரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்காமல் உடலை வாங்க முடியாது என அவரது உறவினர்கள் மறுத்தனர்.
ஊத்துக்கோட்டை, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் ராபின், 26. நேற்று முன்தினம் இரவு இவர் நண்பரின் திருமணத்திற்கு சென்று பைக்கில் திரும்பும்போது, திருவள்ளூர் சாலையில், நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் அவரை வழிமறித்தனர். பின் அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் தாக்கிவிட்டு தப்பினர். இதில் ராபின் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், ஆறு தனிப்படை அமைத்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். ராபினின் உடல் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்காமல், ராபினின் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் மறுத்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடித்து விடுவதாக போலீசார் கூறியும் ஏற்க வில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X