ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி கொலை செய்தவர் கைது| Dinamalar

ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி கொலை செய்தவர் கைது

Added : செப் 02, 2022 | |
சண்டிகர்:ஹரியானாவில் பலாத்காரத்துக்கு உடன்பட மறுத்த பெண்ணை, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்தவரை, போலீசார் கைது செய்தனர். ஹரியானா மாநிலம் ரேதாக்கைச் சேர்ந்த, 30 வயது பெண், தன் 9 வயது மகனுடன், பதேபாத் மாவட்டத்தில் உள்ள டோகனாவுக்கு ரயிலில் பயணித்தார். இரவு நேரம் என்பதால், அவர் பயணித்த பெட்டியில் வேறு யாரும் இல்லை. வழியில் உள்ள ஒரு ஸ்டேஷனில் ஏறிய நபர், அந்த

சண்டிகர்:ஹரியானாவில் பலாத்காரத்துக்கு உடன்பட மறுத்த பெண்ணை, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.

ஹரியானா மாநிலம் ரேதாக்கைச் சேர்ந்த, 30 வயது பெண், தன் 9 வயது மகனுடன், பதேபாத் மாவட்டத்தில் உள்ள டோகனாவுக்கு ரயிலில் பயணித்தார். இரவு நேரம் என்பதால், அவர் பயணித்த பெட்டியில் வேறு யாரும் இல்லை. வழியில் உள்ள ஒரு ஸ்டேஷனில் ஏறிய நபர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அந்த பெண் கடுமையாக போராடினார்.

இருவருக்கும் கடும் சண்டை மூண்டது. ஆத்திரம் அடைந்த அந்த நபர், அந்த பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் அந்த ரயில், டோகனா ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. அந்த பெண்ணின் கணவர், மகனையும், மனைவியையும் அழைத்துச் செல்வதற்காக காத்திருந்தார். அப்போது, மகன் மட்டும் அழுதபடி இருந்ததைப் பார்த்து, அவர் அதிர்ச்சி அடைந்தார். ரயிலில் நடந்த சம்பவம் குறித்து அந்த சிறுவன், தந்தையிடம் அழுதபடி கூறினான்.

இதையடுத்து, அவர் போலீசில் புகார் அளித்தார். இரவு முழுதும் தேடியும், மனைவியை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மனைவியின் உடல், அடுத்த நாள் காலையில் தான் கிடைத்தது. இதற்கிடையே, பெண்ணை ரயிலில் இருந்து தள்ளி விட்ட நபரை, போலீசார் கைது செய்தனர். அவர் பெயர் சந்தீப் என்பது தெரிய வந்தது. போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக ரயிலில் இருந்து குதித்ததால் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X