எம்.எல்.ஏ.,வை அறைந்த கணவர்பொது இடத்தில் அட்டூழியம்

Added : செப் 02, 2022 | |
Advertisement
பதிந்தா:பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வை, அவரது கணவர் பொது இடத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த, மாநில பெண்கள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பதிந்தாவைச் சேர்ந்தவர் பல்ஜிந்தர் கவுர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வான இவரை, சமீபத்தில் பொது இடத்தில் வைத்து, அவரது கணவர்

பதிந்தா:பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வை, அவரது கணவர் பொது இடத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்த, மாநில பெண்கள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பதிந்தாவைச் சேர்ந்தவர் பல்ஜிந்தர் கவுர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வான இவரை, சமீபத்தில் பொது இடத்தில் வைத்து, அவரது கணவர் ஆவேசமாக கன்னத்தில் அறைந்த, 'வீடியோ' வெளியானது.

அதில், பல்ஜீந்தருக்கும், அவரது கணவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பின், எம்.எல்.ஏ.,வை, அவரது கணவர் ஆவேசமாக தாக்குகிறார். அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து, இழுத்துச் செல்கின்றனர். இது தொடர்பாக பல்ஜீந்தர் கவுர் போலீசில் புகார் அளிக்கவில்லை. ஆனாலும், பொது இடத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும்படி, மாநில அரசுக்கு, பஞ்சாப் மாநில பெண்கள் ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X