சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து இன்று (செப்.2 ம் தேதி) ஒரே நாளில் 481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் இன்று (செப்.2) 481 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,69,623 ஆக அதிகரித்துள்ளது. இன்று 518 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,26,14 ஆக உயர்ந்து உள்ளது. இன்று ( செப்.1) கோவிட் பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 38,036 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு குறைவாக காணப்பட்டது. நேற்று (செப் 1ம் தேதி ) 72 ஆக இருந்த நிலையில் இன்று (செப் 2 ம் தேதி) சென்னையில் 75 ஆக உள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,056 ஆக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல்

