தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுமா அரசு?:தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : செப் 02, 2022 | |
Advertisement
தஞ்சாவூர்:தி.மு.க., தேர்தல் அறிக்கையில், தென்னை விவசாயிகளுக்கான அறிவிப்புகளை செயல்படுத்த வேண்டும் என தென்னை விவசாயிகள் அமைச்சர், அதிகாரிகளிடம் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அகில இந்திய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடமும், உற்பத்தி திறனில் முதலிடமும், சாகுபடி பரப்பில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.தமிழகத்தில் கோயம்புத்துார், பொள்ளாச்சி,

தஞ்சாவூர்:தி.மு.க., தேர்தல் அறிக்கையில், தென்னை விவசாயிகளுக்கான அறிவிப்புகளை செயல்படுத்த வேண்டும் என தென்னை விவசாயிகள் அமைச்சர், அதிகாரிகளிடம் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

அகில இந்திய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடமும், உற்பத்தி திறனில் முதலிடமும், சாகுபடி பரப்பில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.தமிழகத்தில் கோயம்புத்துார், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டைக்கு அடுத்து தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

'கஜா' புயல் தாக்கத்தால், 60 சதவீதம் பாதிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தென்னை உற்பத்தி அதிகரிக்க துவங்கியுள்ளது.இந்நிலையில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில், தென்னை நலவாரியம் அமைக்கப்படும், என தெரிவித்திருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு வட்ட தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் காந்தி கூறியதாவது:பாமாயிலை, அரசு ரேஷன் கடை மற்றும் சத்துணவு கூடங்களுக்கு சப்ளை செய்கிறது. இதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கினால், தேங்காய் எண்ணெயின் நுகர்வு கணிசமாக உயரும்; தேங்காய் விலை சீராகும்.தென்னை சார்ந்த தொழில் பூங்காவை அமைத்து, அரசு மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைப்புடன் கூட்டுறவு முறையில், தேங்காய் மதிப்பு கூட்டு பொருள்களை தயார் வழிவகை செய்ய வேண்டும்.

கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட தென்னை நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.தேங்காய் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நிர்ணயித்துள்ள கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையான 105.90 ரூபாயுடன், கூடுதலாக தமிழக அரசு ஊக்கத்தொகையாக 15 ரூபாய் சேர்ந்து வழங்க வேண்டும்.

பேராவூரணியில், நிரந்தரமாக அரசு கொப்பரைக் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தென்னை தொழிற்சாலைக்கு, அரசு மானியம் வழங்க வேண்டும்.உலர் களம், சோலார் மின் அலகு அமைக்க வேண்டும் என முதல்வர், அமைச்சர்கள், முதன்மை செயலர்கள் உள்ளிட்டவர்களிடம் மனு அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X