வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கருமத்தம் பட்டியில் பொதுமக்களுக்கு அ.தி.மு.க., வினர் இனிப்புகள் வழங்கினர்.
சூலுார்:உயர்நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் வகையில், சூலுார், கருமத்தம்பட்டியில் அ.தி.மு.க.,வினர், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் செல்லும் என, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதையடுத்து, சூலுார் எம்.எல்.ஏ., அலுவலகம் முன், அ.தி.மு.க., பழனிச்சாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.எம்.எல்.ஏ., கந்தசாமி தலைமையில் திரண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்களுக்கு, இனிப்புகளை வழங்கினர். இதேபோல், கருமத்தம்பட்டி நகராட்சியில், நகர செயலாளர் ஆதவன் பிரகாஷ் தலைமையில், பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.