மதுரை ரயில்வே ஸ்டேஷனில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை

Added : செப் 02, 2022 | |
Advertisement
மதுரை,:மதுரை ரயில்வே ஸ்டேஷனிற்குள் 6 - 7 வது பிளாட்பாரம் இடையே நடை மேம்பாலத்தின் கீழ் இரும்புத் துாணில் வடமாநிலத்தை சேர்ந்த முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு மேல் பிளாட்பாரத்திற்கு இடையே உள்ள நடைமேடையின் கீழ் உள்ள இரும்புத் துாணின் மேல் பகுதியில் அவர் கயிறு கட்டி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை தீயணைப்பு

மதுரை,:மதுரை ரயில்வே ஸ்டேஷனிற்குள் 6 - 7 வது பிளாட்பாரம் இடையே நடை மேம்பாலத்தின் கீழ் இரும்புத் துாணில் வடமாநிலத்தை சேர்ந்த முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு மேல் பிளாட்பாரத்திற்கு இடையே உள்ள நடைமேடையின் கீழ் உள்ள இரும்புத் துாணின் மேல் பகுதியில் அவர் கயிறு கட்டி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி, எஸ்.ஐ., ஹூமாயின் அந்நபரின் சட்டைப் பையில் இருந்த ரயில் டிக்கெட்டுகளை வைத்து விசாரிக்கின்றனர்.

போலீசார் கூறியதாவது:அறுபது வயது மதிக்கத்தக்க அந்த நபர் பாக்கெட்டில் வைத்திருந்த டிக்கெட்களை ஆய்வு செய்தபோது, ஆக்ராவில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து குருவாயூர் ரயிலில் மதுரை வந்துள்ளார். இங்கிருந்து ராமேஸ்வரம் சென்ற அவர் மீண்டும் மதுரை திரும்பியுள்ளார்.

பெரும்பாலும் முன்பதிவில்லாத டிக்கெட்டில் பயணித்ததால் அவர் குறித்த விவரம் தெரிவதில் சிரமம் உள்ளது. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ரயில்வே ஸ்டேஷனுக்குள் சில இடங்களுக்கு அவர் சென்றது தெரிகிறது. ஆக்ரா போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X