சிறை அதிகாரி வீட்டிற்கு தீ வைத்த சிறைக்காவலர் உட்பட 2 பேர் கைது

Added : செப் 02, 2022 | |
Advertisement
கடலுார்:கடலுார் மத்திய சிறை உதவி ஜெயிலர் குடும்பத்தினரை கொலை செய்ய, அவரது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில், சிறைக்காவலர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன், 38; இவர், குடும்பத்துடன் மத்திய சிறைக்கு எதிரில் சிறை அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்கிறார். கடந்த, 27ம் தேதி, அவரது வீட்டின் சமையல் அறையில் மர்ம நபர்கள் ஜன்னல்
சிறை அதிகாரி வீட்டிற்கு தீ வைத்த சிறைக்காவலர் உட்பட 2 பேர் கைது

கடலுார்:கடலுார் மத்திய சிறை உதவி ஜெயிலர் குடும்பத்தினரை கொலை செய்ய, அவரது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில், சிறைக்காவலர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன், 38; இவர், குடும்பத்துடன் மத்திய சிறைக்கு எதிரில் சிறை அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்கிறார். கடந்த, 27ம் தேதி, அவரது வீட்டின் சமையல் அறையில் மர்ம நபர்கள் ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பினர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதே சிறையில், முதல் நிலை காவலரான சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டி சாமியார் தோட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 44; சென்னை, காவாங்கரை, நீலகண்டன் நகரைச் சேர்ந்த மாதவன் மகன் தினேஷ், 23; ஆகியோருக்கு தொடர்பு இருந்தது தெரிந்தது. இவர்களை போலீசார் பிடித்து நேற்று விசாரணை நடத்தினர்.

இதில், கடலுார் மத்திய சிறையில் சென்னை, எண்ணுாரைச் சேர்ந்த கொலை வழக்கு தண்டனை குற்றவாளி ரவுடி தனசேகருக்கு, மொபைல் போன் பயன்படுத்துவது, உணவு, சிகரெட் வாங்கி கொடுப்பதில், சிறை காவலர் செந்தில்குமார் உடந்தையாக இருந்துள்ளார்.கடந்த, 8ம் தேதி, கைதி தனசேகரிடம், உதவி ஜெயிலர் மணிகண்டன் மொபைல் போனை பறிமுதல் செய்தார். இதனால், செந்தில்குமாருக்கு, கைதி தனசேகர் கொடுத்து வந்த 'மாமூல்' நின்றது.தொடர்ந்து, தினேஷ் உள்ளிட்ட பலர், மணிகண்டனுக்கு மொபைல் போனில் கொலை மிரட்டல் விடுத்தனர்.

முதல் நிலை காவலர் செந்தில்குமார், தினேஷ் ஆகியோர் உள்ளூர் நபர்களிடம் பெட்ரோல் வாங்கிக் கொடுத்து, வீட்டில் தீ வைத்து மணிகண்டன் குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது.இதையடுத்து, இருவரையும் கைது செய்து, கடலுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.தலைமறைவான உள்ளூர் நபர்களை கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. உதவி ஜெயிலர் குடும்பத்தினரை கொலை செய்ய, சக காவலர்களே அவரது வீட்டிற்கு தீ வைத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X