அணுகுசாலையில் கால்வாய் பணிவாகன ஓட்டிகள் அவதி

Added : செப் 02, 2022 | |
Advertisement
மேடவாக்கம்,ரேடியல் சாலையில் இருந்து மடிப்பாக்கம் செல்லும் அணுகு சாலையில், மழைநீர் கால்வாய் பணிகள் துவங்கப்பட்டுள்ளதால், அந்த சாலை திடீரென்று மூடப்பட்டுவிட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பல்லாவரத்திலிருந்து ரேடியல் சாலை வழியாக மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, உள்ளகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், ஈச்சங்காடு மேம்பாலத்தின்
அணுகுசாலையில் கால்வாய் பணிவாகன ஓட்டிகள் அவதி


மேடவாக்கம்,ரேடியல் சாலையில் இருந்து மடிப்பாக்கம் செல்லும் அணுகு சாலையில், மழைநீர் கால்வாய் பணிகள் துவங்கப்பட்டுள்ளதால், அந்த சாலை திடீரென்று மூடப்பட்டுவிட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பல்லாவரத்திலிருந்து ரேடியல் சாலை வழியாக மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, உள்ளகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், ஈச்சங்காடு மேம்பாலத்தின் கீழ், இடது பக்கம் உள்ள அணுகுசாலை வழியாக செல்கின்றனர்.தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கும் இந்த அணுகுசாலை, முறையாக பராமரிக்கப்படாததாலும், குப்பையை கொட்டப்பட்டு அசுத்தமான சூழல் நிலவியதாலும், குண்டும் குழியுமாக உள்ளதாலும், வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர்.மேலும், லாரிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள், இந்த அணுகுசாலையை பார்க்கிங் பகுதியாக பயன்படுத்துவதால், பல நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.இந்நிலையில், மழைநீர் கால்வாய் பணிகள் காரணமாக, திடீரென்று இந்த அணுகுசாலை மூடப்பட்டுவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கூடுதல் சிரமத்தை சந்தித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இவ்விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி, மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடித்து, அணுகுசாலையை சீரமைத்து, முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X