உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:ன்னீர்செல்வம் தகவல்

Added : செப் 02, 2022 | |
Advertisement
பெரியகுளம்:''உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க., சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்,''முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சென்னையில் ஜூலை11 ல் முன்னாள் முதல்வர் பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டியது செல்லும் என நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது தேனிமாவட்டம் பெரியகுளம் வீட்டில் பன்னீர் செல்வம்
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:ன்னீர்செல்வம் தகவல்

பெரியகுளம்:''உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க., சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்,''முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னையில் ஜூலை11 ல் முன்னாள் முதல்வர் பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டியது செல்லும் என நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது தேனிமாவட்டம் பெரியகுளம் வீட்டில் பன்னீர் செல்வம் இருந்தார். கட்சி நிர்வாகிகள் ,தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.


பின்னடைவு இல்லை



ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகல் வந்த பிறகு அதனை முழுமையாக படித்து கருத்துக்களை ஆராய்ந்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி மேல் முறையீடு செய்வோம். ஒன்றரை கோடி தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். பின்னடைவு இல்லை.

தொண்டர்களை நம்பித்தான் இந்த இயக்கம் உள்ளது. பொதுக்குழுவை வைத்து இல்லை. நாங்கள் எழுச்சியாக தான் உள்ளோம். தொண்டர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இறுதி தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கும். பன்னீர்செல்வம் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெறுவார்.இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும் ,என்றார்.


தேர்தல் ஆணைய தீர்ப்பு தான் இறுதி



கோவை செல்வராஜ் கூறியதாவது: உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்புகள் மாறி மாறி வருகிறது.தேர்தல் ஆணையம் கொடுக்கின்ற தீர்ப்பு தான் இறுதியானது. 11 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் பன்னீர்செல்வம் தயவால் நான்கரை ஆண்டாக பழனிசாமி முதல்வராக இருந்தார்.

மூன்று மாதங்களாக தான் திடீரென கட்சியில் அவர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். அ.தி.மு.க., வை அழிக்க பார்க்கிறார். பொதுச் செயலாளர் ஜெயலலிதா வகித்த பதவி. இதில் யாரையும் உட்கார வைக்கமாட்டோம் என்று இருந்த நிலையில், பழனிசாமி அப்பதவி வேண்டுமென அடம் பிடிக்கிறார். ஐந்து பேர் சேர்ந்து கம்பெனி போல் அ.தி.மு.க., வை நடத்துகின்றனர். அது நடக்காது. பன்னீர்செல்வம் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக இருப்பார். இதை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது ,என்றார்.


மேல்முறையீடு



பன்னீர்செல்வம் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க., சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றார். அதன்பின் சென்னைக்கு கிளம்பினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X