குடியிருப்புக்குள் மீன் மார்க்கெட்மாற்று இடம் ஒதுக்கியும் அட்டகாசம்| Dinamalar

குடியிருப்புக்குள் மீன் மார்க்கெட்மாற்று இடம் ஒதுக்கியும் அட்டகாசம்

Added : செப் 02, 2022 | |
வியாசர்பாடி, வியாசர்பாடி, சாஸ்திரி நகரில் குடியிருப்புக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டால், 40 ஆண்டுகளாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு மாற்று இடம் ஒதுக்கியும், ஏழு ஆண்டுகளாகியும் பணிகள் நடக்காததால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.சென்னை வியாசர்பாடி, 45வது வார்டுக்குட்பட்ட சாஸ்திரி நகரில் 17, 18 மற்றும் 19வது தெரு உள்ளது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான

வியாசர்பாடி, வியாசர்பாடி, சாஸ்திரி நகரில் குடியிருப்புக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டால், 40 ஆண்டுகளாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு மாற்று இடம் ஒதுக்கியும், ஏழு ஆண்டுகளாகியும் பணிகள் நடக்காததால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.சென்னை வியாசர்பாடி, 45வது வார்டுக்குட்பட்ட சாஸ்திரி நகரில் 17, 18 மற்றும் 19வது தெரு உள்ளது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.இங்கு பல ஆண்டுகளாக சாஸ்திரி நகர், 17, 18 மற்றும் 19வது தெருக்களில், 50க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து, சிறு வியாபாரிகள் மீன் விற்பனை செய்கின்றனர்.குடியிருப்புகளுக்கு மத்தியில் இந்த மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மீன் கழிவுகளால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு நிலவுகிறது.இதனால், இப்பகுதியில் தொற்று நோய் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. மேலும், தினந்தோறும் அதிகரித்து வரும் மீன் கடைகளால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இப்பகுதியில் வீசும் கடும் துர்நாற்றம் தாங்க முடியாமல், பலர் வீடுகளை விட்டு விட்டு, மாற்று இடங்களுக்கும் குடிபெயர்கின்றனர்.எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், வேறு இடத்தில் மீன் மார்க்கெட் அமைத்துத் தர வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இது குறித்து சாஸ்திரி நகர் மக்கள் கூறியதாவது:சாஸ்திரி நகரில் மக்கள் பயன்படுத்தும் அனைத்து தெருக்களையும் சிறு வியாபாரிகள் முழுதும் ஆக்கிரமித்து, மீன் கடைகளை அமைத்து, மக்கள் வாழ்வதற்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.தற்போது மீன் விற்பனை செய்யும் இடம், மீன் கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் இல்லை; குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட இடம். மீன்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தெருக்களில் பாய்வதால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.இது சுற்றுப்புறத்தில் வாழும் மக்களுக்கு சுகாதார சீர்கேட்டையும், உடல்நிலை பாதிப்புகளையும் ஏற்படுகிறது.1983ம் ஆண்டின் நில வரைபடத்தின்படி, அப்பகுதி தெருக்களை அளந்து, அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, அப்பகுதி மக்களுக்கு கொடுக்க வேண்டும்.சென்னை கலெக்டருக்கு இது குறித்து பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளன. எனவே சென்னை கலெக்டர் குடியிருப்புவாசிகளின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கடந்த 2014ல், மாநகராட்சி சார்பில், வியாசர்பாடி, சாஸ்திரி நகர், 16வது தெருவில், மீன் மார்க்கெட் அமைக்க, 5 கிரவுண்ட் இடம் ஒதுக்கி நிதியும் ஒதுக்கப்பட்டது.ஆனால், முதல் கட்ட பணிகள் கூட துவங்காமல், அப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் சாஸ்திரி நகர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது புற்றீசல் போல் அதிகரித்து வரும் மீன் கடைகளால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் விஷ பூச்சிகளும், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது.சாலைகளை ஆக்கிரமித்துள்ள கடைகளுக்கு, வாடகையும் இல்லை. ஆனால் ஒரு தரப்பினர், தலா ஒரு கடைக்கு 500 ரூபாய் என வசூலித்து, உள்ளூர் அரசியல்வாதிகள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சமாளிக்கின்றனர்.எனவே, நீண்ட கால பிரச்னைக்கு மாநகராட்சியினர் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X