ஆபாச படத்தில் நடிக்க மிரட்டல் பெண் உட்பட இருவர் கைது

Updated : செப் 03, 2022 | Added : செப் 02, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சேலம்:சினிமா வாய்ப்பு தருவதாக கூறி, கணவரை பிரிந்த பெண்ணை ஆபாச படத்தில் நடிக்க மிரட்டிய பெண் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.சேலம், இரும்பாலை, மோகன் நகரைச் சேர்ந்த, 32 வயது பெண், 16 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், கணவருடன் கருத்து வேறுபாடால் தனியாக வசிக்கிறார். அவரிடம், சேலத்தாம்பட்டியைச் சேர்ந்த மணி, சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று தருவதாக கூறினார்.
ஆபாச படத்தில் நடிக்க மிரட்டல் பெண் உட்பட இருவர் கைது

சேலம்:சினிமா வாய்ப்பு தருவதாக கூறி, கணவரை பிரிந்த பெண்ணை ஆபாச படத்தில் நடிக்க மிரட்டிய பெண் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.

சேலம், இரும்பாலை, மோகன் நகரைச் சேர்ந்த, 32 வயது பெண், 16 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், கணவருடன் கருத்து வேறுபாடால் தனியாக வசிக்கிறார். அவரிடம், சேலத்தாம்பட்டியைச் சேர்ந்த மணி, சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று தருவதாக கூறினார். தொடர்ந்து, இடைப்பாடி, வீரப்பம்பாளையத்தைச் சேர்ந்த வேலு சத்ரியன், 38, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் இந்திரா நகரைச் சேர்ந்த ஜெயஜோதி, 23, ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

அவர்கள், 'குளோபல் கிரியேஷன்' சினிமா நிறுவனம் நடத்துவதாகவும், 30 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்று தருவதாகவும் கூறினர். 'பணம் இல்லை' என அப்பெண் தெரிவிக்க, சேலம், ஏ.வி.ஆர்., ரவுண்டானா அருகே உள்ள அலுவலக பணியில் அவரை ஈடுபடுத்தினர். மூன்று மாதம் பணிபுரிந்த நிலையில், அங்கு பெண்களை அழைத்து வந்து, ஆபாச படம் தயாரிப்பதை பார்த்தார்.

அதிர்ச்சியடைந்த அவர், பணியில் இருந்து நின்று விட்டார்.நேற்று முன்தினம் அலுவலகத்திற்கு சென்ற அவர், பணியாற்றிய காலத்துக்கு சம்பளம் கேட்டார். அங்கிருந்தவர்கள், 'ஆபாச படத்தில் நடித்தால் மட்டும் சம்பளம் வழங்கப்படும்' என தெரிவித்தனர். இதில், அவருக்கும், அங்கிருந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

இது குறித்து அப்பெண் புகார்படி, சூரமங்கலம் மகளிர் போலீசார், வேலு சத்ரியன் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.அப்போது, ஆபாச படங்கள், கேமரா, மடிக்கணினியை பறிமுதல் செய்தனர். மேலும், வேலு சத்ரியன், ஜெயஜோதி மீது, ஆபாச படம் தயாரிக்க முயற்சித்தல், கொலை மிரட்டல் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
04-செப்-202219:16:29 IST Report Abuse
வாய்மையே வெல்லும் சொட்டை தலையில் ஆணி அடிச்சு வாயில ரிவிட்டு அடித்து பூட்டு போடணும்.. இவனுக்கு உடந்தை ஆக இருந்த பெண்ணுக்கும் கடுமையான தண்டனை கொடுக்கணும் ஆபீஸர்ஸ்
Rate this:
ponssasi - chennai,இந்தியா
05-செப்-202215:51:07 IST Report Abuse
ponssasiபோட்டோ பாத்தீங்க இல்ல, இவன் ஏதாவது அசிஸ்டன்ட் அல்லது புரோக்கர் ஆக இருக்கலாம். மற்றவர்களை கைது செய்த புகைப்படம் ஏன் வரவில்லை. ஒரு பெரிய அமௌன்ட் கைமாறி இருக்கலாம், இவங்க கிட்ட போயி ஆணி அடி பூட்டு போடுன்னு போங்க ஜீ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X