கல்லுாரி 3வது மாடி படிக்கட்டில்தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

Added : செப் 02, 2022 | |
Advertisement
சென்னை,தனியார் கல்லுாரி, மூன்றாவது மாடியில் உள்ள வகுப்பறைக்கு நடந்து சென்றபோது, படிக்கட்டில் தவறி விழுந்து மாணவி பலியானார்.சென்னை, சவுகார்பேட்டை, ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சுனில்சர்மா. இவரது மகள் ரோஷினி சர்மா, 20. வேப்பேரியில் உள்ள ஜெயின் கல்லுாரியில், இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று கல்லுாரி மூன்றாவது மாடியில் உள்ள, வகுப்பறைக்கு படியில்
கல்லுாரி 3வது மாடி படிக்கட்டில்தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

சென்னை,தனியார் கல்லுாரி, மூன்றாவது மாடியில் உள்ள வகுப்பறைக்கு நடந்து சென்றபோது, படிக்கட்டில் தவறி விழுந்து மாணவி பலியானார்.சென்னை, சவுகார்பேட்டை, ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சுனில்சர்மா. இவரது மகள் ரோஷினி சர்மா, 20. வேப்பேரியில் உள்ள ஜெயின் கல்லுாரியில், இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று கல்லுாரி மூன்றாவது மாடியில் உள்ள, வகுப்பறைக்கு படியில் ஏறிச் சென்றுள்ளார். அப்போது, திடீரென மயக்கம் ஏற்பட்டு, படிகட்டில் கீழே உருண்டு விழுந்துள்ளார்.பேராசியர்கள் மற்றும் மற்ற மாணவியர் ஓடிச்சென்று காப்பாற்ற முயன்றனர். மயக்க நிலையில், அவரை சென்ட்ரல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் ரோஷ்னி சர்மா ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. சம்பவ இடத்தில், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கல்லுாரி நிர்வாகத்திடம் முதற்கட்ட விசாரணை நடத்தினார். வேப்பேரி போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X