பெருங்களத்தூர் ஏரியில் ஆகாய தாமரை:அகற்றுவது எப்போது என கேள்வி

Added : செப் 02, 2022 | |
Advertisement
பெருங்களத்துார்:பெருங்களத்துார் ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை, மழை காலத்தை முன்னிட்டு, போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.ஆக்கிரமிப்புதாம்பரம் மாநகராட்சியில், பெருங்களத்துார்- பீர்க்கன்காரணை பகுதிகளுக்கு இடையே பெருங்களத்துார் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின்
பெருங்களத்தூர் ஏரியில் ஆகாய தாமரை:அகற்றுவது எப்போது என கேள்வி

பெருங்களத்துார்:பெருங்களத்துார் ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை, மழை காலத்தை முன்னிட்டு, போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


ஆக்கிரமிப்பு


தாம்பரம் மாநகராட்சியில், பெருங்களத்துார்- பீர்க்கன்காரணை பகுதிகளுக்கு இடையே பெருங்களத்துார் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குடியிருப்புகளாக மாறிவிட்டன. மற்றொரு புறம், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், பல ஆண்டுகளாக ஏரியில் கலந்து வருகிறது. இதனால், தண்ணீரின் நிறம் மாறி, துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல், பெரும் பகுதியில் ஆகாய தாமரை செடி வளர்ந்து, ஏரியை மூடியுள்ளது. இதனால், ஏரி இருப்பதே தெரியவில்லை.


வெள்ள பாதிப்பு


ஒவ்வொரு மழையின் போதும், இந்த ஏரி நிரம்பினால், சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.இந்த ஆண்டு பருவ மழை தொடங்கவுள்ளதால், போர்க்கால அடிப்படையில் ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற, பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X