நியாய விலைக்கடை பணியாளர்கள் கோரிக்கை

Added : செப் 02, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:'கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துடன் இணைக்க வேண்டும்' என, காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ்நாடு அரசு நியாய விலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காஞ்சிபுரத்தில் நடந்த பொதுகுழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீனு சரவணன் தலைமை வகித்தார். மாநில தலைவர் ராஜேந்திரன்,

காஞ்சிபுரம்:'கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துடன் இணைக்க வேண்டும்' என, காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ்நாடு அரசு நியாய விலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சிபுரத்தில் நடந்த பொதுகுழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீனு சரவணன் தலைமை வகித்தார். மாநில தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலர் தினேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.இதில், கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துடன் இணைக்க வேண்டும்.
சென்னையில் இயங்கி வரும் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைமை அலுவலகத்தை நியாய விலை கடைகள் இயங்கும் எல்லைக்கு உட்பட்ட தாம்பரம் அருகில் அமைக்க வேண்டும்.
வையாவூரில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு சொந்தமான இடத்தில், கேரளாவில் செயல்படுவதுபோல பல்நோக்கு கூட்டுறவு மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் அன்புராஜன் நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X