60 சவரன், ரூ.1.25 லட்சம் திருடிய மூவர் கைது| Dinamalar

60 சவரன், ரூ.1.25 லட்சம் திருடிய மூவர் கைது

Added : செப் 02, 2022 | |
திருப்பூர்:பனியன் கம்பெனி உரிமையாளர் வீட்டில், 60 சவரன் நகை, 1.25 லட்சம்ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், டிரைவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகர், பார்க் அவென்யூவைச் சேர்ந்தவர் வினோத்குமார், 42; பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த, 30ம் தேதி, குன்னத்துாரில் நடந்த திருமணத்தில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றார். அன்றிரவு

திருப்பூர்:பனியன் கம்பெனி உரிமையாளர் வீட்டில், 60 சவரன் நகை, 1.25 லட்சம்ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், டிரைவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகர், பார்க் அவென்யூவைச் சேர்ந்தவர் வினோத்குமார், 42; பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த, 30ம் தேதி, குன்னத்துாரில் நடந்த திருமணத்தில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றார். அன்றிரவு வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த, 60 சவரன் நகை, 1.25 லட்சம் ரூபாய், 1 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பினர். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையில், வீட்டில் கார் டிரைவராக பணிபுரிந்த வத்தலகுண்டு முருகன், 30, என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். வீட்டில் உள்ளவர்கள் திருமணத்துக்கு சென்ற நிலையில், நண்பர்கள் வாயிலாக வீட்டில் பணம், நகையை அவர் கொள்ளையடித்தது தெரியவந்தது.இதுதொடர்பாக, முருகன், 30, சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தங்கதுரை, 30, ஊட்டியைச் சேர்ந்த முருகவேல், 27, ஆகியோரை கைது செய்து, நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X