எக்ஸ்குளுசிவ் செய்தி

அ.தி.மு.க.,வில் 'சீசா' ஆட்டம்: கட்சியினரிடம் தீராது குழப்பம்!

Updated : செப் 02, 2022 | Added : செப் 02, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக, பன்னீர்செல்வம் - பழனிசாமி தரப்பு மாறி மாறி நீதிமன்றத்தை நாடும் நிலையில், தீர்ப்புகள் இரு தரப்புக்கும் சாதகமாக வருவதால், 'சீசா' ஆட்டம் ஆடும் நிலையில், இரு தரப்பினரும் உள்ளனர்.ஒற்றைத் தலைமைப் பதவிக்கு பழனிசாமி தேர்வாவதை தடுக்க, ஜூன் ௨௩ பொதுக்குழுவுக்கு தடை கோரி, பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது; இந்த
 அ.தி.மு.க., சீசா ,கட்சி, குழப்பம்!

அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக, பன்னீர்செல்வம் - பழனிசாமி தரப்பு மாறி மாறி நீதிமன்றத்தை நாடும் நிலையில், தீர்ப்புகள் இரு தரப்புக்கும் சாதகமாக வருவதால், 'சீசா' ஆட்டம் ஆடும் நிலையில், இரு தரப்பினரும் உள்ளனர்.

ஒற்றைத் தலைமைப் பதவிக்கு பழனிசாமி தேர்வாவதை தடுக்க, ஜூன் ௨௩ பொதுக்குழுவுக்கு தடை கோரி, பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது; இந்த உத்தரவு பழனிசாமிக்கு சாதகமாக அமைந்தது.அன்று இரவே பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள், பொதுக்குழு நடத்த தடை விதிக்கவில்லை.


நிறைவேற்றக் கூடாது



ஆனால், 'ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் தவிர, வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது' என உத்தரவிட்டது; இது, பன்னீர்செல்வத்துக்கு சாதகம் ஆனது.பொதுக்குழு கூடியது; ஆனால், பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரித்தனர். அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். சிறப்பு பொதுக்குழு ஜூலை 11ல் கூடும் என்றும் அறிவித்தனர்.

இதற்கு தடை கோரி பன்னீர்செல்வம் மீண்டும் நீதிமன்றம் சென்றார். நீதிபதி தடை விதிக்க மறுத்ததால், பழனிசாமிக்கு சாதகம் ஏற்பட்டது. திட்டமிட்டபடி பொதுக்குழு கூடியது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.


பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கினார். பதிலுக்கு பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை எல்லாம் பன்னீர்செல்வம் நீக்கினார். புதிதாக இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமித்தார். இதனால் அ.தி.மு.க., யார் கையில் உள்ளது, யார் நிர்வாகிகள் என்ற சந்தேகம் தொண்டர்களிடம் ஏற்பட்டது.


கட்சியில் இடமில்லை



இந்த குழப்பத்துக்கு இடையில், பன்னீர்செல்வம் மீண்டும் நீதிமன்றம் சென்றார். அவரது மனுவை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு முடிவு செல்லாது என்று அறிவித்தார். இந்த தீர்ப்பு பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக அமைந்தது. இதை எதிர்த்து, பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள், பொதுக்குழு செல்லும் எனக் கூறி, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்துள்ளனர்.

இது பழனிசாமிக்கு சாதகமாகவும், பன்னீர்செல்வத்துக்கு பாதகமாகவும் அமைந்து உள்ளது.பொதுக்குழு தீர்மானத்தின்படி, பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு, கட்சியில் இடமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது. அடுத்து பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அங்கு என்ன தீர்ப்பு வரும் எனத் தெரியவில்லை. சட்டப் போராட்டம் முடிவுக்கு வரும் வரை, அ.தி.மு.க.,வினர் 'சீசா' ஆட்டம் ஆடுவர் என்பதில் சந்தேகம் இல்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
03-செப்-202218:24:25 IST Report Abuse
krish கூட்டு குழி பறிப்பு நடைபெறுகின்றது. யாரெல்லாம் புதைபடுவார்களோ? அந்த இறைவனுக்கே வெளிச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X