போலீஸ் குடியிருப்புக்கு நிதி ஒதுக்கப்படுமா?பணிகள் விரைவில் துவங்க வலியுறுத்தல்

Added : செப் 02, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் பராமரிப்பு இல்லாத போலீஸ் குடியிருப்பு கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில், புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுத்து, நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷன் பின்பக்கம், இரண்டு ஏக்கர் பரப்பில் போலீஸ் குடியிருப்பு இருந்தது. மூன்று அடுக்கு கொண்ட, 24 பிளாக்களில், 240 போலீசார்
போலீஸ் குடியிருப்புக்கு நிதி ஒதுக்கப்படுமா?பணிகள் விரைவில் துவங்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் பராமரிப்பு இல்லாத போலீஸ் குடியிருப்பு கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில், புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுத்து, நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷன் பின்பக்கம், இரண்டு ஏக்கர் பரப்பில் போலீஸ் குடியிருப்பு இருந்தது. மூன்று அடுக்கு கொண்ட, 24 பிளாக்களில், 240 போலீசார் குடியிருப்புகள்; 12 எஸ்.ஐ., க்கள், மூன்று இன்ஸ்பெக்டர் குடியிருப்புகள் இருந்தன.கட்டடம் பராமரிப்பு இல்லாமல் வலுவிழந்ததால், குடியிருப்பை காலி செய்ய உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் வாயிலாக டெண்டர் விடப்பட்டு, கட்டடம் இடிப்பு பணிகள் துவங்கப்பட்டது. புதியதாக, 266 வீடுகள் கட்ட, 75 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டது. நிதி கிடைத்ததும் பணிகள் துவங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் சட்டசபையில் முதல்வர் அறிவிப்பையடுத்து, கடந்த மே மாதம் காவலர் வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார். புதிய கட்டடப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், ஆய்வு முடிந்து, ஐந்து மாதங்களாகியும் இன்னும் பணிகள் துவங்கப்படவில்லை.காவலர் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'போலீஸ் குடியிருப்புகள், 100 சதுரஅடி வரை அதிகரிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது, 650- 750 சதுர அடியாக மாற்றப்படும். இதன் அடிப்படையில் புதிய குடியிருப்புகளுக்கான வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும் உடனடியாக பணிகள் துவங்கப்படும்,' என்றனர்.


புதர் மண்டி கிடக்குது


பொள்ளாச்சி போலீஸ் குடியிருப்பு இருந்த பகுதி பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுகிறது. அந்த இடம் விஷ பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளன.மேலும், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே, அரசு உரிய கவனம் செலுத்தி குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X