கோவையில் 220 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்| Dinamalar

கோவையில் 220 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

Added : செப் 02, 2022 | |
கோவை:கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, 220 விநாயகர் சிலைகள் நேற்று நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஹிந்து அமைப்புகள், பக்தர்கள், பொதுமக்களால் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அவற்றுக்கு பூஜை செய்து வழிபாடும் நடத்தப்பட்டு வந்தது.வழிபடப்பட்ட சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் பணி
கோவையில் 220 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

கோவை:கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, 220 விநாயகர் சிலைகள் நேற்று நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஹிந்து அமைப்புகள், பக்தர்கள், பொதுமக்களால் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அவற்றுக்கு பூஜை செய்து வழிபாடும் நடத்தப்பட்டு வந்தது.வழிபடப்பட்ட சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்கென குறிச்சி குளம், சிங்காநல்லுார் குளம், முத்தண்ணன் குளம், குனியமுத்துார் குளம் ஆகிய இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குளக்கரையில் சவுக்கு தடுப்புகளும், கூடாரமும் அமைக்கப்பட்டிருந்தன.ஏராளமானபோலீசாரும்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 1:00 மணிக்கு மேல்,விநாயகர் சிலைகளை, பக்தர்கள் மேள தாளம் முழங்க, போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.சிலைகள் அனைத்தும் குளக்கரையில் இறக்கி வைக்கப்பட்டன. பக்தர்களின் வழிபாட்டுக்கு பிறகுஅவற்றில் இருந்த மாலைகள் அனைத்தும் தனியாக சேகரிக்கப்பட்டன.அதன்பின் மீனவர்கள் சார்பில், பரிசலில் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டன. பகல் 1:00 மணிக்கு தொடங்கிய விநாயகர் சிலை விசர்ஜனம், மாலை 6:00 மணி வரை தொடர்ந்தது. மாநகரில் மட்டும் 220 சிலைகள் கரைக்கப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர். சிலை கரைப்பு முன்னிட்டு, கோவை மாநகரில் நேற்று வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. குறிச்சி குளம் வழியாக, நேற்று மதியத்துக்கு மேல் பஸ்கள் அனுமதிக்கப்படவில்லை. பஸ்கள் அனைத்தும் போத்தனுார் வழியாக திருப்பி விடப்பட்டிருந்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X