பெட்ரோல் பங்க்கில் ரகளை:எட்டு பேர் கும்பல் கைது

Added : செப் 02, 2022 | |
Advertisement
கோவை:கோவை பெரிய கடைவீதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளர் ராமநாதபுரத்தை சேர்ந்த சர்புதீன், 54. இதே பங்க்கில், பெரிய கடைவீதியை சேர்ந்த ஷர்புதீன், 51, மேற்பார்வையாளராக வேலை பார்த்தார்.பங்க் உரிமையாளரான நவக்சனுக்கு, கணக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. தனக்கு சொந்தமான வேறு நிறுவனத்தில் வேலை பார்க்கும் சங்கீதா, யூனுாஸ் ஜெகேஷ்

கோவை:கோவை பெரிய கடைவீதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளர் ராமநாதபுரத்தை சேர்ந்த சர்புதீன், 54. இதே பங்க்கில், பெரிய கடைவீதியை சேர்ந்த ஷர்புதீன், 51, மேற்பார்வையாளராக வேலை பார்த்தார்.பங்க் உரிமையாளரான நவக்சனுக்கு, கணக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. தனக்கு சொந்தமான வேறு நிறுவனத்தில் வேலை பார்க்கும் சங்கீதா, யூனுாஸ் ஜெகேஷ் ஆகியோரை, கணக்கு தணிக்கை செய்வதற்காக அனுப்பி வைத்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்பார்வையாளர் ஷர்புதீன், வேறு சிலருடன் சேர்ந்து தகராறு செய்தார். தணிக்கைக்கு வந்தவர்களை தடுத்தும், அரிவாளை காட்டியும் மிரட்டல் விடுத்தனர்.இது தொடர்பாக உக்கடம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. எஸ்.ஐ., ரேணுகா தேவி வழக்கு பதிந்தார். விசாரித்த இன்ஸ்பெக்டர் சரவணன், குற்றம் சாட்டப்பட்ட ஷர்புதீன், அகமது கபீர், 38, சுபேர், 46, முகமது அலி, 39, அப்பாஸ், 40, பைசல் ரகுமான், 35, ராஜ்குமார், 45, நவாஷ், 35, ஆகியோரை கைது செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X