சிட்டி கிரைம்

Added : செப் 02, 2022 | |
Advertisement
மகனை தாக்கிய தந்தை கைதுகுனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர், எம்.ஜி.ஆர்., நகரிலுள்ள விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 55. இவரது இரண்டாவது மகன் சுகுமார், 28; குடிப்பழக்கம் உடையவர். இவர் வழக்கம் போல குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். ராஜேந்திரன் இதுகுறித்து கேட்டார். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜேந்திரன் வீட்டினுள் இருந்த இரும்பு

மகனை தாக்கிய தந்தை கைது

குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர், எம்.ஜி.ஆர்., நகரிலுள்ள விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 55. இவரது இரண்டாவது மகன் சுகுமார், 28; குடிப்பழக்கம் உடையவர். இவர் வழக்கம் போல குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். ராஜேந்திரன் இதுகுறித்து கேட்டார். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜேந்திரன் வீட்டினுள் இருந்த இரும்பு ராடை எடுத்து சுகுமாரை தாக்கினார்.முகம், தலையில் படுகாயமடைந்தவரை தாய் சாந்தி அருகிலிருந்தோர் உதவியுடன் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இவரது புகாரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரனை கைது செய்தனர், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி


குனியமுத்தூரிலுள்ள முத்துசாமி உடையார் வீதியில் வசிப்பவர் சீமன்ஜலோ, 30; கட்டுமான தொழிலாளி. இவரது மகன் பாதல், 13. பாதல் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து, அதற்கு மின் விளக்கு அலங்காரம் செய்ய முற்பட்டுள்ளான். எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். குனியமுத்தூர் போலீசார் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


மாணவியர் மாயம்


ராமநாதபுரத்தை சேர்ந்த 18 வயது மாணவி, அரசு கலைக்கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லுாரிக்கு சென்ற இவர், வீடு திரும்பவில்லை. பெற்றோர் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.பீளமேட்டை சேர்ந்த 18 வயது மாணவி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பாதது பற்றி, பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.அம்மன் குளத்தை சேர்ந்த ஐஸ்வர்யா தேவி, 30, தன் 6 வயது மகனுடன் காணாமல் போய் விட்டதாக, அவரது கணவர் சத்யராஜ், 37, ராமநாதபுரம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.


ஆபாச சித்தரிப்பு; ஒருவர் கைது


பிள்ளையார்புரம் நாகராஜபுரத்தை சேர்ந்தவர் ஹரிதாஸ், 54. இவர், முகநுால் பதிவில் பிள்ளையார் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டிருந்தார். இது பற்றி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் நாராயணசாமி, போத்தனுார் போலீசில் புகார் தெரிவித்தார். ஹரிதாசை கைது செய்த போலீசார், உடல் நலம் கருதி ஜாமினில் விடுவித்தனர்.


மூதாட்டியிடம் செயின் பறிப்பு


வடவள்ளி, ஜி.கே.எஸ்., அவென்யூவை சேர்ந்தவர் வசந்தகுமாரி,60. இவர், நேற்றுமுன்தினம், பகலில், வடவள்ளி -- தொண்டாமுத்தூர் ரோடு, சின்மயா நகரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த இருவர், வசந்தகுமாரியின் கழுத்தில் இருந்த, 2½ பவுன் செயினை பறித்துக் கொண்டு, தப்பி விட்டனர். இது குறித்து வசந்தகுமாரி, வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை, தேடி வருகின்றனர்.


திருநங்கைகள் கைது


கடலுார் மாவட்டம் சிதம்பரம் மாதா கோவில் வீதியை சேர்ந்த அந்தோணிராஜ், 29. நண்பரின் திருமணத்துக்கு கோவை வந்திருந்த இவர், காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்கு காத்திருந்தார்.அப்போது அவரை வழிமறித்த திருநங்கைகள் தர்சா (எ) சுல்தான் அலாவுதீன், 37, நித்யா (எ) நாகராஜ், 22, அவரிடம் இருந்த 6,300 ரூபாயை பறித்துக் கொண்டு ஓடினர். அருகே இருந்தவர்களின் உதவியுடன், அவர்களை அந்தோணி ராஜ் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தார். திருநங்கைகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X