மக்கள் எங்களை மதிப்பரா?எம்.எல்.ஏ.,க்கள் காட்டம்!

Added : செப் 02, 2022 | |
Advertisement
கோவை:'தமிழக அரசு நடத்தும் விழாக்களுக்கு எங்களை அழைப்பதில்லை' என, கோவை கலெக்டரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து முறையிட்டனர்.கோவை மாவட்ட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ச்சுனன், தாமோதரன்,அமல் கந்தசாமி, கந்தசாமி உள்ளிட்டோர், கலெக்டர் சமீரனை நேற்று சந்தித்து அளித்த கடிதம்: அரசின் திட்டங்களுக்கு பூமி பூஜை போடும் போதும், சைக்கிள் வழங்கும் விழாவுக்கும் எங்களை
மக்கள் எங்களை மதிப்பரா?எம்.எல்.ஏ.,க்கள் காட்டம்!

கோவை:'தமிழக அரசு நடத்தும் விழாக்களுக்கு எங்களை அழைப்பதில்லை' என, கோவை கலெக்டரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து முறையிட்டனர்.

கோவை மாவட்ட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ச்சுனன், தாமோதரன்,அமல் கந்தசாமி, கந்தசாமி உள்ளிட்டோர், கலெக்டர் சமீரனை நேற்று சந்தித்து அளித்த கடிதம்: அரசின் திட்டங்களுக்கு பூமி பூஜை போடும் போதும், சைக்கிள் வழங்கும் விழாவுக்கும் எங்களை அழைப்பதில்லை; மற்ற மாவட்டங்களில், எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலையில் அரசு திட்டங்களுக்கு பூஜை போடுகின்றனர்.

கோவை மாவட்டத்தில் தி.மு.க.,வினரால் நடத்தப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம், அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது.அவிநாசி ரோடு பாலத்தில் தி.மு.க., விளம்பர போஸ்டர்கள் உள்ளன; மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.மருதமலை கோவில் மண்டபத்துக்கு பூஜை போட்டுள்ளனர். எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்களை அழைக்காமல், தி.மு.க., பகுதி செயலரை வைத்து நிகழ்ச்சி நடத்தி உள்ளனர். இப்படி இருந்தால், மக்கள் எங்களை எப்படி மதிப்பர்?இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X