கோடநாடு சம்பவத்தில் புதிய தகவல்கள் உயர் நீதிமன்றத்தில் போலீஸ் வாதம்| Dinamalar

கோடநாடு சம்பவத்தில் புதிய தகவல்கள் உயர் நீதிமன்றத்தில் போலீஸ் வாதம்

Added : செப் 02, 2022 | |
சென்னை:'கோடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் காவலாளி கொலை வழக்கில், புதிய தகவல்கள் கிடைத்துள்ளதால், வழக்கு விசாரணைக்கு, காலவரம்பு நிர்ணயம் செய்யக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.நீலகிரி மாவட்டம், கோடநாடு பகுதியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட் பங்களாவில், 2017 ஏப்ரல் 23ல், பணியில்

சென்னை:'கோடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் காவலாளி கொலை வழக்கில், புதிய தகவல்கள் கிடைத்துள்ளதால், வழக்கு விசாரணைக்கு, காலவரம்பு நிர்ணயம் செய்யக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோடநாடு பகுதியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட் பங்களாவில், 2017 ஏப்ரல் 23ல், பணியில் இருந்த காவலாளி ஓம்பகதுாரை கொலை செய்து, பல்வேறு பொருட்களை, மர்மக் கும்பல் கொள்ளை அடித்தது.இந்த கொள்ளை, கொலை சம்பவங்களில் தொடர்புடைய சயான், மனோஜ், தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில், கனகராஜ் என்பவர் கார் விபத்தில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் தனிப்படை, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன், தோழி சசிகலா, அவரது உறவினர் விவேக், வாளையார் மனோஜ், உயிரிழந்த கார் ஓட்டுனர் கனகராஜ் உறவினர், சயான், முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, அவரது உறவினர்கள் என, 200க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், 'கோடநாடு எஸ்டேட் கொள்ளை, கொலை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்' என, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜரானார்.''கோடநாடு எஸ்டேட் கொள்ளை, கொலை வழக்கில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மறு விசாரணை நடத்தப்பட்டதில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள் பற்றிய புதிய தகவல்கள் தெரியவந்து உள்ளன. ''எனவே, வழக்கு விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயம் செய்யக் கூடாது,'' என்றார்.இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை செப்., 16க்கு தள்ளி வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X