திருப்பதிக்கு 150 பஸ்கள்!

Added : செப் 03, 2022 | |
Advertisement
சென்னை:திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், வரும் 27ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்க உள்ளதால், தமிழகத்தில் இருந்து தினமும், 150 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால், வீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. இந்நிலையில், வரும் 27ம் தேதி

சென்னை:திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், வரும் 27ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்க உள்ளதால், தமிழகத்தில் இருந்து தினமும், 150 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால், வீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. இந்நிலையில், வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ திருவிழா துவங்கி, 10 நாட்கள் நடக்க உள்ளது.

இதில் பங்கேற்க, வட மாவட்டங்களில் இருந்து அதிக பக்தர்கள் திருப்பதி செல்வர் என்பதால், தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், வரும் 25ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை, தினமும் 150 பஸ்களை இயக்க உள்ளது. இதுபோல, ஆந்திர அரசு போக்குவரத்து கழகமும், தினமும் 150 சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X