ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிவு

Added : செப் 03, 2022 | |
Advertisement
ஓசூர்:ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து குறைந்த போதும், தென்பெண்ணையாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 3,432 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், நேற்று காலை நீர்வரத்து, 2,430 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 2,660 கன அடி நீர் திறந்து

ஓசூர்:ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து குறைந்த போதும், தென்பெண்ணையாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 3,432 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், நேற்று காலை நீர்வரத்து, 2,430 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 2,660 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அதனால், ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றில் குறைந்த அளவு ரசாயன நுரையுடன் தண்ணீர் சென்றது. நேற்று காலை நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.02 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணைக்கு, இரு நாட்களாக தொடர்ந்து, 610 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையின் மொத்த உயரமான, 32.80 அடிக்கு நீர் இருப்பு உள்ளதால், உபரி நீர் முழுவதும் வெளியேறி, தென்பெண்ணை ஆற்றில் கலந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X