புவனகிரி அரசு பள்ளியில் பச்சிளம் குழந்தை சடலம்

Added : செப் 03, 2022 | |
Advertisement
புவனகிரி:கடலுார் மாவட்டம், புவனகிரி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வரை, 900க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை பள்ளி கழிவறையில், பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில், தொப்புள் கொடியுடன், ஆண் குழந்தை இறந்து கிடந்தது. கழிவறைக்கு சென்ற மாணவியர் பார்த்து அதிர்ச்சியடைந்து, ஆசிரியர்களிடம் கூறினர்.ஆசிரியர்கள் புவனகிரி

புவனகிரி:கடலுார் மாவட்டம், புவனகிரி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வரை, 900க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை பள்ளி கழிவறையில், பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில், தொப்புள் கொடியுடன், ஆண் குழந்தை இறந்து கிடந்தது. கழிவறைக்கு சென்ற மாணவியர் பார்த்து அதிர்ச்சியடைந்து, ஆசிரியர்களிடம் கூறினர்.ஆசிரியர்கள் புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், குழந்தை சடலத்தை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.பள்ளி ஆசிரியர்களை காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர். டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X