ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விற்பனை இந்திய நிறுவனங்கள் வசமாகுமா?| Dinamalar

'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விற்பனை இந்திய நிறுவனங்கள் வசமாகுமா?

Added : செப் 03, 2022 | கருத்துகள் (8) | |
புதுடில்லி:'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தை, இந்திய விமான நிறுவனங்கள் வாங்குமா என்ற எதிர்பார்ப்பு சந்தையில் எழுந்து உள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் சிக்கி, தத்தளித்து வருகிறது.இந்நிலையில், அரசுக்கு சொந்தமான இந்த விமான நிறுவனத்தை, தனியார்மயமாக்கும் முடிவுக்கு இலங்கை அரசு வந்துள்ளது. முதல்கட்டமாக, 49
'ஸ்ரீலங்கன்,ஏர்லைன்ஸ்',விற்பனை,இந்தியா,வசமாகுமா?

புதுடில்லி:'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தை, இந்திய விமான நிறுவனங்கள் வாங்குமா என்ற எதிர்பார்ப்பு சந்தையில் எழுந்து உள்ளது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் சிக்கி, தத்தளித்து வருகிறது.இந்நிலையில், அரசுக்கு சொந்தமான இந்த விமான நிறுவனத்தை, தனியார்மயமாக்கும் முடிவுக்கு இலங்கை அரசு வந்துள்ளது. முதல்கட்டமாக, 49 சதவீத பங்குகளை விற்கவும் முடிவு செய்துள்ளது.

கொரோனா உள்ளிட்ட பாதிப்புகளை தொடர்ந்து, இலங்கையின் பொருளாதாரம் மிகவும் சரிந்து உள்ளது. சுற்றுலா துறையை பெரிதும் நம்பி இருக்கும் நாடுகளில் ஒன்று இது. இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இந்த துறையின் பங்கு 12 சதவீதமாகும். சுற்றுலா துறையின் வீழ்ச்சியை தொடர்ந்து, விமான சேவையும் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், விமான சேவையை அரசு நடத்துவது என்பது முடியாது என்பதால், அதை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இச்சூழலில், 'ஏர் இந்தியா'வை டாடா குழுமம் வாங்கியது போல, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை, இந்திய நிறுவனங் கள் ஏதாவது வாங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

இந்தியாவில், விமான சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களின் நிலைமை, தற்போது தான் ஓரளவு சரியாகி வருகிறது. அதனால் இந்திய நிறுவனங்கள் வாங்குவதற்கு வாய்ப்பில்லை என்றும், மேற்கு ஆசியாவை சேர்ந்த விமான நிறுவனங்கள் வாங்க வாய்ப்பிருப்பதாகவும், துறை சார்ந்த வல்லுனர்கள் கருதுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X