மயிலை கோயில் மயில் சிலைஆகம குழு முடிவெடுக்க உத்தரவு| Dinamalar

மயிலை கோயில் மயில் சிலைஆகம குழு முடிவெடுக்க உத்தரவு

Added : செப் 03, 2022 | |
சென்னை:சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மாயமான மயில் சிலையின் அலகில் மலர் இருந்ததா; பாம்பு இருந்ததா என்பதை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் ஆய்வுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனு:மயிலை கபாலீஸ்வரர் கோவிலில், புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமாகி

சென்னை:சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மாயமான மயில் சிலையின் அலகில் மலர் இருந்ததா; பாம்பு இருந்ததா என்பதை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் ஆய்வுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனு:மயிலை கபாலீஸ்வரர் கோவிலில், புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமாகி விட்டது. மயில் சிலையின் அலகில், மலர் வடிவமைக்கப்பட்டிருந்தது.
2014ல் நடந்த குடமுழுக்கின் போது, இச்சிலை மாற்றப்பட்டு, மயில் அலகில் பாம்பு இருப்பது போல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது, ஆகம விதிகளுக்கு முரணானது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, மயில் சிலை மாயமானது தொடர்பான வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜரானார்.

இருதரப்பு வாதங்களுக்கு பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களை கண்டறிய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்தக் குழு, மயில் சிலையின் அலகில் இருந்தது மலரா அல்லது பாம்பா என்பதை முடிவு செய்ய வேண்டும்.அலகில் மலர் இருந்தது என முடிவுக்கு வந்தால், பாம்புடன் இருக்கும் மயில் சிலையை, ஆகம விதிகளின்படி, மாற்றி அமைக்க வேண்டும்.

அலகில் பாம்பு இருந்தது என்றால், சிலையை மாற்ற வேண்டியது இல்லை. நீண்ட காலமாக இந்த பிரச்னை நிலுவையில் இருப்பதால், குழு விரைந்து முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X