வெற்றிக்கு உதவும் நேர்மை...உண்மை...!இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் பேச்சு| Dinamalar

வெற்றிக்கு உதவும் நேர்மை...உண்மை...!இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் பேச்சு

Added : செப் 03, 2022 | |
கோவை:''நேர்மை மற்றும் உண்மை முக்கியத்துவம் வாய்ந்தவை. இறுதியில் உண்மையே வெல்லும்,'' என, 'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் பேசினார்.எஸ்.எஸ்.வி.எம்., கல்விக் குழுமத்தின், 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 'உருமாறும் இந்தியா' என்ற தலைப்பில், மூன்று நாள் மாநாடு, மேட்டுப்பாளையத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்தது.'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்
வெற்றிக்கு உதவும் நேர்மை...உண்மை...!இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் பேச்சு

கோவை:''நேர்மை மற்றும் உண்மை முக்கியத்துவம் வாய்ந்தவை. இறுதியில் உண்மையே வெல்லும்,'' என, 'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் பேசினார்.எஸ்.எஸ்.வி.எம்., கல்விக் குழுமத்தின், 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 'உருமாறும் இந்தியா' என்ற தலைப்பில், மூன்று நாள் மாநாடு, மேட்டுப்பாளையத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்தது.'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் பேசியதாவது:இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக, என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உண்மையை வெளிக்கொணர, 20 ஆண்டுகள் வழக்கை நடத்தினேன். என்னை வழக்கில் சிக்க வைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டேன்.நேர்மை மற்றும் உண்மை முக்கியத்துவம் வாய்ந்தவை. இறுதியில் உண்மையே வெற்றி பெறும். எனவே, உங்கள் இலக்கு தெளிவாக இருந்தால், நீங்கள் நினைப்பதை சாதிக்கலாம். மாணவர்களின் அச்சத்தை போக்கி அவர்களை மலரச் செய்ய வேண்டும். இதை அனைத்து கல்வி நிறுவனங்களும் மேற்கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கல்வி குழும நிறுவனர் மணிமேகலை மோகன் பேசினார். 'இஸ்ரோ' சிறப்பு திட்டங்கள் இயக்குனர் சுப்பையா, ஐ.சி.சி.ஐ., முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியன், கல்விக்குழும செயலாளர் மோகன்தாஸ், பள்ளி அறங்காவலர் ஸ்ரீஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

கல்வியின் முதுகெலும்பு ஆசிரியர்கள்

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியதாவது:பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளும், கழிப்பறைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். வகுப்பறைகள், காற்றோட்டம் உள்ள வகையில் இருக்க வேண்டும். கல்வியின் முதுகெலும்பு ஆசிரியர்கள். மாணவர்களின் முன்னேற்றத்தில், ஆசிரியர்களின் பங்கு அதிகளவில் இருக்க வேண்டும். ஊழல் இல்லாத நிர்வாகத்தை, எதிர்காலத்தில் மாணவர்கள் உருவாக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X