நாகம்மாள் கோயிலில் கும்பாபிஷேகம்

Added : செப் 03, 2022 | |
Advertisement
கோபால்பட்டி : திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே வி.குரும்பபட்டி நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேக திருப்பணிகள் மாவட்ட கவுன்சிலர் விஜயன் ஏற்பாட்டில் நடந்தது. ஆக., 31 முளைப்பாரி, தீர்த்தம் கன்னியாபுரத்திலிருந்து மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புண்யாக வாசனம், கணபதி ஹோமம், நவகிரக
நாகம்மாள் கோயிலில் கும்பாபிஷேகம்

கோபால்பட்டி : திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே வி.குரும்பபட்டி நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேக திருப்பணிகள் மாவட்ட கவுன்சிலர் விஜயன் ஏற்பாட்டில் நடந்தது. ஆக., 31 முளைப்பாரி, தீர்த்தம் கன்னியாபுரத்திலிருந்து மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புண்யாக வாசனம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி பூஜை உள்ளிட்ட நான்கு கால யாக வேள்வி பூஜை நடந்தது.நேற்று தீர்த்த குடங்கள் யாக சாலை, கோயிலை சுற்றி வந்து கும்பத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பங்களில் தீர்த்தம் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்ஷா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், ரத்தினகுமார், பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன், சாணார்பட்டி ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள், துணைத் தலைவர் ராமதாஸ், ஊராட்சி தலைவர்கள் கண்ணன், தமிழரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.சாணார்பட்டி ஒன்றியம் அஞ்சுகுழிபட்டி ஊராட்சி சோழகுளத்துப்பட்டி ஆண்டிச்சாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X