தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்காக நடந்த ஆலோசனை கூட்டம்

Added : செப் 03, 2022 | |
Advertisement
திருமங்கலம் : திருமங்கலத்தில் டவுன் பஸ்ஸ்டாண்டை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்க இருப்பதால், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைப்பது குறித்து நகராட்சி தலைவர் ரம்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.திருமங்கலம் நான்கு வழி சாலை பகுதிகளில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க கிடைத்த இடங்கள் சரியாக அமையாததால் தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டை முழுமையாக இடித்துவிட்டு, நவீன வசதிகளுடன் விரிவாக்கம்

திருமங்கலம் : திருமங்கலத்தில் டவுன் பஸ்ஸ்டாண்டை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்க இருப்பதால், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைப்பது குறித்து நகராட்சி தலைவர் ரம்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருமங்கலம் நான்கு வழி சாலை பகுதிகளில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க கிடைத்த இடங்கள் சரியாக அமையாததால் தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டை முழுமையாக இடித்துவிட்டு, நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில், நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி அருகே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைப்பது, அதற்கு சாலை, தெருவிளக்கு வசதி, நிழற்குடை ஏற்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்கு மதுரையில் இருந்து வரும் பஸ்கள் மின்வாரிய அலுவலகம் வழியாக செல்லவும், மதுரைக்குச் செல்லும் பஸ்கள் ராஜாஜி சிலை வழியாக வெளியேறவும், உசிலம்பட்டி, சோழவந்தான், கள்ளிக்குடி, விருதுநகர், காரியாபட்டி செல்லும் பஸ்கள் தங்கமணி தெரு வழியாக வந்து, தற்போது உள்ள டவுன் பஸ் ஸ்டாண்டை கடந்து செல்லலாம் எனவும் முடிவு செய்தனர்.

நகராட்சி துணைத் தலைவர் ஆதவன், கமிஷனர் டெரன்ட்ஸ் லியோன், போக்குவரத்து கழக துணை மேலாளர் நடராஜன், கிளை மேலாளர் நாகசுபாஷ்சந்திரபோஸ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் அருள்செல்வம், சீமான் மற்றும் கவுன்சிலர்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X