இனிப்பு வழங்கிய அ.தி.மு.க.,வினர்

Added : செப் 03, 2022 | |
Advertisement
திருமங்கலம், : அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என, சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்புஅளித்ததால் கட்சியினர்இனிப்பு வழங்கி கொண்டாடினர்.அ.தி.மு.க.,வினர் திருமங்கலம் தேவர் சிலை அருகே ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஜெ., பேரவை மாவட்டசெயலாளர் தமிழழகன்தலைமையில்

திருமங்கலம், : அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என, சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்புஅளித்ததால் கட்சியினர்இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அ.தி.மு.க.,வினர் திருமங்கலம் தேவர் சிலை அருகே ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஜெ., பேரவை மாவட்டசெயலாளர் தமிழழகன்தலைமையில் பஸ் ஸ்டாண்ட் அருகே வெடி வெடித்து இனிப்புகள் வழங்கினர். திருமங்கலம்நகராட்சி கவுன்சிலர்பாண்டி கலந்து கொண்டனர்.

மேலுார்: மேலுரில் செக்கடி, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பழனிசாமி ஆதரவாளர்கள் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றியசெயலாளர் வெற்றிசெழியன் பங்கேற்றனர்.

சோழவந்தான்: அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கில் பழனிசாமிக்கு ஆதரவான நீதிமன்றம் தீர்ப்பு கிடைத்ததால், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் முன் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், ஒன்றியகுழுத் தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா, முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் நாகராஜன், மலைச்சாமி மற்றும்மாவட்ட, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X