'கஞ்சாவின் தலைநகரமாக மாறிய தமிழகம்'

Updated : செப் 03, 2022 | Added : செப் 03, 2022 | கருத்துகள் (37) | |
Advertisement
சென்னை : 'தமிழகத்தை, கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியது தான் தி.மு.க., அரசின் சாதனை' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.அவரது அறிக்கை:எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் உச்சத்தில் இருக்கிறது என்பதை, 'ஆப்பரேஷன் கஞ்சா - 1.0, 2.0, 3.0' என்று, காவல் துறையினரின் கண்துடைப்பு நடவடிக்கையால் காண முடிகிறது.கடந்த ஆக., 11ல் முதல்வர் ஸ்டாலின், போதை
கஞ்சா, தமிழகம், அண்ணாமலை, Annamalai, TNBJP, தமிழக பாஜ, Ganja, Tamil Nadu, DMK,  Tamil Nadu BJP, திமுக,


சென்னை : 'தமிழகத்தை, கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியது தான் தி.மு.க., அரசின் சாதனை' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.அவரது அறிக்கை:எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் உச்சத்தில் இருக்கிறது என்பதை, 'ஆப்பரேஷன் கஞ்சா - 1.0, 2.0, 3.0' என்று, காவல் துறையினரின் கண்துடைப்பு நடவடிக்கையால் காண முடிகிறது.
கடந்த ஆக., 11ல் முதல்வர் ஸ்டாலின், போதை பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுத்தார். அடுத்த மூன்றாவது நாளில் தமிழகத்தில் ஒரே நாளில், 274 கோடி ரூபாய்க்கு மது விற்று சாதனை செய்தது அரசு.

வேடிக்கை


அமைச்சர் பொன்முடி, திறனற்ற தி.மு.க., அரசின் இயலாமையை மீண்டும் ஒரு முறை வெட்ட வெளிச்சமாக்கி விட்டார்.அவர், மது ஆலை நடத்தி வரும் எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகனை உடன் அமர்த்தி, செய்தியாளர்களை சந்தித்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.குஜராத் மாநிலம், முந்த்ரா துறைமுகத்தில் இருந்து தான் இந்தியாவில் அனைத்து இடங்களுக்கும் போதை பொருள் செல்கிறது என்பது போன்ற, 'வாட்ஸ் ஆப்பில்' வரும் பொய்யான தகவல்களை, அமைச்சர் கூறுவது வேடிக்கை.


latest tamil newsஇந்த துறைமுகம், எட்டு ஆண்டுகளில் தான் தனியார் மயமாக்கப்பட்டதை போன்றும் பேசியுள்ளார் அமைச்சர். 1998 முதல், முந்த்ரா துறைமுகம் தனியார்மயம் ஆகிவிட்டது என்பது கூட அமைச்சருக்கு தெரியாதா?விஜயவாடா துறைமுகத்தில் இருந்து, தமிழகத்திற்கு போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறது என்பதை, யாரோ எழுதி கொடுத்த துண்டு சீட்டிலிருந்து அமைச்சர் படித்தார்.
கண்துடைப்பு


அதில் கொடுமை என்னவெனில் விஜயவாடாவில் துறைமுகம் மட்டுமல்ல, கடலே இல்லை என்பதே உண்மை.மதியம், 12:00 மணிக்கு முன், 'டாஸ்மாக்' கடைகள் திறக்க கூடாது என்று சட்டம் இருந்தும், அதை கூட சரிவர கண்காணிக்காமல் உறங்குகிறது, தி.மு.க., அரசு.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் கைது அதிகமாகி விட்டது என பெருமை கொள்ளும் அமைச்சர், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தமிழகத்தில் எட்டுத்திக்கும் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது என்பதை உணர வேண்டும். கடத்தி செல்லும் நபர்களை மட்டும் கைது செய்கிறது காவல் துறை.

எங்கிருந்து கஞ்சா வருகிறது; எப்படி முடக்குவது என்பதை ஆலோசிக்காமல், தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியது தான், தி.மு.க., அரசின் சாதனை. தங்களின் திறனற்ற தன்மையை மறைக்க, மத்திய அரசின் மேல் பழிபோடுவதை, தி.மு.க., நிறுத்தி கொள்ள வேண்டும்.முதலில், தி.மு.க., அமைச்சர்கள் நடத்தும் மது ஆலைகளை மூடி விட்ட பின், மற்றவர்களுக்கு அறிவுரை கூறவும். கண்துடைப்பு நடவடிக்கைகளால் மக்களை ஏமாற்றாமல், இனியாவது ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

விஜயவாடா துறைமுகத்தில் இருந்து, தமிழகத்திற்கு போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறது என்பதை, யாரோ எழுதி கொடுத்த துண்டு சீட்டிலிருந்து அமைச்சர் படித்தார். அதில் கொடுமை என்னவெனில் விஜயவாடாவில் துறைமுகம் மட்டுமல்ல, கடலே இல்லை என்பதே உண்மை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
03-செப்-202213:54:57 IST Report Abuse
Suri எப்படித்தான் வெளியே தலை காட்டுது/ இதுக்கா சூடு சொரணை எல்லாத்தையும் கழட்டி வெச்சுட்டு தான் வெளியே வருதுங்க
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
03-செப்-202213:38:52 IST Report Abuse
raja தமிழகத்தில் போதை பொருள்களின் கடத்தும், விற்பனை செய்யும் முக்கிய கேந்திரமாகிவிட்டது இந்த திராவிட ஆட்சியில்....கேட்டால் நம்பர் ஒண்ணாகுவதே என்று பீத்தல் வேறு....
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
03-செப்-202212:30:57 IST Report Abuse
தஞ்சை மன்னர் அதற்க்கு ஒண்டி இருக்கும் உளவுத்துறைதான் காரணம் அதையும் சேர்த்து சொல்லும் இலங்கை தழிழர் அழிப்பில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இந்திய அரசின் ரா அமைப்பில் சார்பாக தமிழக இளஞசர்களை போதைக்கு அடிமை ஆக்கியதே வி பு வீழ்ச்சிக்கு காரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X