'ஐ.என்.எஸ்., விக்ராந்த்': இந்தியாவுக்கு உலக நாடுகள் பாராட்டு

Updated : செப் 03, 2022 | Added : செப் 03, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'ஐ.என்.எஸ்., விக்ராந்த்' என்ற முதல் விமானம் தாங்கி போர்க் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவுக்கு, நட்பு நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.கேரளாவின் கொச்சி துறைமுகத்தில் நடந்த விழாவில், ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி
INS Vikrant, Indian Navy, PM Modi, ஐஎன்எஸ் விக்ராந்த், பிரதமர் மோடி, பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'ஐ.என்.எஸ்., விக்ராந்த்' என்ற முதல் விமானம் தாங்கி போர்க் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவுக்கு, நட்பு நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

கேரளாவின் கொச்சி துறைமுகத்தில் நடந்த விழாவில், ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று(செப்.,2) நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதற்காக இந்தியாவுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் ஆகிய நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன. இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‛முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலை இயக்கிய 5வது நாடு என்ற சிறப்பு பெற்ற இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். இந்தோ - பசிபிக் எல்லையில் தொடர்ந்து இந்தியாவுடன் பணியாற்ற ஆவலாக உள்ளோம்' என வாழ்த்து தெரிவித்துள்ளது.


latest tamil newsஐஎன்எஸ் விக்ராந்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட, பிரிட்டிஷ் உயர் கமிஷனர் அலெக்ஸ் எல்லிஸ், கப்பலின் மேல்தளத்தில் இருந்தவாறு வீடியோ பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இந்நிகழ்வில் கலந்து கொண்டதை பெருமையாக கருதுவதாகவும், இந்திய கடற்படைக்கு இது ஒரு சிறந்த நாள் எனவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


latest tamil newsஇந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நேவோர் ஜிலான், ‛எங்களது இந்திய சகோதரருக்கு வாழ்த்துக்கள். பணி நன்றாக முடிந்தது' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.


latest tamil news


'ஐ.என்.எஸ்., விக்ராந்த்' சிறப்பம்சம்கள்:

20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள 'ஐ.என்.எஸ்., விக்ராந்த்' கப்பல், 860 அடி நீளமும், 203 அடி அகலமும் உடையது. 4.30 கோடி கிலோ எடையை சுமக்கும் திறன் உடையது. 18 மாடிகள் கொண்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த், இரண்டு கால்பந்து மைதானத்தின் பரப்பளவை உடையது. ‛மிக்-9கே' போர் விமானங்கள் மற்றும் ‛கேமோவ்-31' ஹெலிகாப்டர்கள், ‛எம்.எச்-60 ஆர்' ஹெலிகாப்டர்கள் இங்கிருந்து பறக்க முடியும். கப்பலின் மேல்தளத்தில் 30 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்க முடியும். அதிகபட்சமாக 28 நாட்ஸ் வேகத்தில் இக்கப்பல் பயணிக்கும். 2,300 அறைகள் இருக்கும் இக்கப்பலில், 1,700 பேர் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-செப்-202211:13:47 IST Report Abuse
மோகனசுந்தரம் பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
Singa Muthu - kottambatti,இந்தியா
03-செப்-202208:15:45 IST Report Abuse
Singa Muthu எந்தெந்த நாடுகள் பாராட்டியது ? குஜராத், உ பி மற்றும் பீகார் போன்ற நாடுகளோ?
Rate this:
Sadiq Batcha - Tiruchi,இந்தியா
03-செப்-202215:43:09 IST Report Abuse
Sadiq Batchaஇந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். என் போன்ற உண்மையான ............
Rate this:
Cancel
Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா
03-செப்-202207:34:15 IST Report Abuse
Nithila Vazhuthi 1999 ல் துவங்கப்பட்ட விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலின் கட்டுமான பணிகள் 2012 ல் 85% நிறைவடைந்து விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X