போலீஸ் செய்தி | Dinamalar

போலீஸ் செய்தி

Added : செப் 03, 2022 | |
புலிகள் கணக்கெடுப்பு கேமரா திருட்டுராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார் கோயில் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக கடந்த ஜூன் மாதம் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதில் பதிவுகள் சம்பந்தமாக பார்வையிட சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள், நீராவி பீட் பகுதியில் இருந்த ரூ. 41,600 மதிப்புள்ள இரண்டு கேமராக்களும், மெமரி கார்டுகளையும் காணவில்லை. வடக்கு போலீசார்



புலிகள் கணக்கெடுப்பு கேமரா திருட்டு

ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார் கோயில் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக கடந்த ஜூன் மாதம் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதில் பதிவுகள் சம்பந்தமாக பார்வையிட சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள், நீராவி பீட் பகுதியில் இருந்த ரூ. 41,600 மதிப்புள்ள இரண்டு கேமராக்களும், மெமரி கார்டுகளையும் காணவில்லை. வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

காப்பர் கம்பி திருட்டு


தளவாய்புரம்: சேத்தூர் அடுத்த சுந்தரநாச்சியார்புரத்தில் ஏர்டெல் டவர் உள்ளது இதன் மேலாளர் ஈஸ்வரன் மற்றும் உதவியாளர்கள் பராமரிப்பு பணிக்காக சென்றபோது டவரில் இருந்து காப்பர் கம்பியை திருடிக் கொண்டிருந்த ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரனை பிடித்தனர். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X