பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் பெரியார் பல்கலை மாணவருக்கு அழைப்பு

Added : செப் 03, 2022 | |
Advertisement
ஓமலுார் : வரும், 5 முதல், 9 வரை நடக்க உள்ள, பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் பங்கேற்க, பெரியார் பல்கலை மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம், பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் அறிக்கை:பெரியார் பல்கலையில், ஈ.வெ.ரா., - அண்ணாதுரை இருக்கைகள், கருணாநிதி ஆய்வு மையம் சார்பில், வரும், 15 முதல், 17 வரை முப்பெரும் விழா நடக்க உள்ளது. அதை முன்னிட்டு, பெரியார்



ஓமலுார் : வரும், 5 முதல், 9 வரை நடக்க உள்ள, பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் பங்கேற்க, பெரியார் பல்கலை மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம், பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் அறிக்கை:
பெரியார் பல்கலையில், ஈ.வெ.ரா., - அண்ணாதுரை இருக்கைகள், கருணாநிதி ஆய்வு மையம் சார்பில், வரும், 15 முதல், 17 வரை முப்பெரும் விழா நடக்க உள்ளது. அதை முன்னிட்டு, பெரியார் பல்கலை துறைகள், முதுநிலை விரிவாக்க மையம், பல்கலையில் இணைவு பெற்ற கல்லுாரி மாணவர் இடையே பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள், ஒரு வாரம் நடத்தப்பட உள்ளது.

பல்கலைக்குட்பட்ட கல்லுாரி மாணவர் இடையே நடக்க உள்ள போட்டி, பெரியார் பல்கலை வளாகத்தில், செப்., 5 முதல், 9 வரை நடக்க உள்ளது. அதன்படி, 5ல் நாமக்கல் மாவட்டம், 6ல் தர்மபுரி மாவட்டம், 7ல் கிருஷ்ணகிரி மாவட்டம், 8ல் சேலம் மாவட்ட கல்லுாரி மாணவர்களுக்கும், 9ல் பெரியார் பல்கலை துறைகள், தர்மபுரி முதுநிலை விரிவாக்க மைய மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படும்.

வெற்றி பெறுவோருக்கு, முப்பெரும் விழாவில் பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். போட்டி தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன், தலைப்பு அறிவிக்கப்படும். அதில் பங்கேற்க உள்ள மாணவர்கள், கல்லுாரி முதல்வரின் கடிதத்துடன் போட்டியில் பங்கேற்கலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X