கடைகள் அமைக்க மறுத்த வியாபாரிகள்

Added : செப் 03, 2022 | |
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்தூரில் தற்காலிக​ வாரச்சந்தை இடம் சேறும், சகதியுமாக மாறியதால் வியாபாரிகள் அங்கு கடைகள் அமைக்காமல் சாலையோரத்தில் அமைத்தனர்.முதுகுளத்தூர் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள வாரச்சந்தை இடத்தில் பேரூராட்சி சார்பில் புதிய கடைகள் கட்டப்படுகிறது. இதையடுத்து, முதுகுளத்தூர்-- பரமக்குடி சாலையில் போலீஸ் ஸ்டேஷன் அருகே தற்காலிகமாக இடம் தேர்வு செய்யப்பட்டு
கடைகள் அமைக்க மறுத்த வியாபாரிகள்

முதுகுளத்துார் : முதுகுளத்தூரில் தற்காலிக​ வாரச்சந்தை இடம் சேறும், சகதியுமாக மாறியதால் வியாபாரிகள் அங்கு கடைகள் அமைக்காமல் சாலையோரத்தில் அமைத்தனர்.

முதுகுளத்தூர் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள வாரச்சந்தை இடத்தில் பேரூராட்சி சார்பில் புதிய கடைகள் கட்டப்படுகிறது. இதையடுத்து, முதுகுளத்தூர்-- பரமக்குடி சாலையில் போலீஸ் ஸ்டேஷன் அருகே தற்காலிகமாக இடம் தேர்வு செய்யப்பட்டு வாரசந்தை நடக்கிறது. கமுதி, வீரசோழன், பேரையூர், அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

முதுகுளத்தூர் பகுதியில் இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்ததால் தற்காலிகவாரசந்தை​ இடத்தில் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் வாரச்சந்தை இடத்தில் கடைகள் அமைக்காமல் சில வியாபாரிகள் சாலையோரம் அமைத்து வியாபாரம் செய்தனர். மழைக்காலம் துவங்க உள்ளதால் தற்காலிக வாரசந்தை இடத்தை சீரமைக்க வேண்டும், என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X